ஆஸ்திரேலியாவில் இவ்வளவு பிரம்மாண்ட சிவன் கோயிலா?… அந்த அதிசய பெட்டகத்தில் என்ன இருக்கு தெரியுமா?
சுற்றிலும் மலைகளால் சூழ்ந்து, பச்சை பசேலென் அமைதியான சூழலில் அமந்துள்ளது, ஆஸ்திரேலியாவின் மிண்டோவில் உள்ள ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் ஆலயம். இந்த முக்தி குப்தேஸ்வரரை தரையிலிருந்து 15 அடி கீழே இறங்கி சென்றால் தரிசிக்கலாம். ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ள மிண்டோ எனும் இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. இது 1450 சதுர அடி பரப்பில் குகை வடிவில் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 1997ல் இந்த கோயில் கட்ட தொடங்கப்பட்டு 1999ம் ஆண்டு மகாசிவராத்திரியின் போது, ஸ்ரீ முக்தி குப்தேஸ்வர் பிரதிஷ்டை செய்யப்பாட்டு வழிபாடு தொடங்கப்பட்டது.
இந்த கோயிலில், நம் ஊரில் உள்ள கோயிலைப் போன்று கருவறை இல்லாமல், திறந்த வெளி போன்று உள்ளது. கருவறைக்கு இருபுறமும் மாதா கோயில், ராம் பரிவார் கோயில்மற்றும் பக்கச்சுவர்களீல் விநாயகர் கோயில், ஆஞ்சநேயர் கோயில் உள்ளன. இவை அனைத்தும் பளிங்கு கல்லால் ஆனவை. இந்த கோயிலில் உலகிலேயே முதன் முதலாக உருவாகப்பட்ட பளிங்கு கல்லால் ஆன 4.5 மீட்டர் உயரமுள்ள சிவன் சிலை இக்குகை கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் கோயிலில் உள்ள சிவ பெருமானின் சிலை, உத்தரப் பிரதேசம், வாரணாசியில் இருந்து கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலைக்கு பின்னர் அமைக்கப்பட்டிருக்கும் ஒளி விளக்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை வெவ்வேறு நிறங்களில் ஜொலித்து கண்களை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் கருவறை கீழே 10 மீட்டர் ஆழத்தில் ஒரு அதிசய பெட்டி உள்ளது. அதில் உலகெங்கும் உள்ள இரண்டு மில்லியன் சிவ பக்தர்கள் ‘ஓம் நமசிவாய’ என எழுதிய மந்திரம் அடங்கி உள்ளது. அதோடு இதில் உலகின் பல பகுதிகளில் உள்ள புண்ணிய நதி நீர், ஐம்பெரும் கடல் நீர், எட்டு வித உலோகங்களும் இதில் அடங்கி வைக்கப்பட்டுள்ளன.