Aadhaar Card | இனி PVC ஆதார் அட்டை பெறுவது ரொம்ப ஈசி!! UIDAI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!
வங்கிக் கணக்கு தொடங்கும் போதும் அல்லது அரசுத் திட்டத்தில் பயன்பெறும் போதும் என ஒவ்வொரு பணியிலும் ஆதார் எண் கேட்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் ஆதார் அட்டையே முகவரிச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது. இது தவிர குழந்தை சேர்க்கைக்கும் ஆதார் அட்டை அவசியம். அத்தகைய முக்கியமான ஆவணமான உள்ள உங்கள் ஆதார் அட்டை சில காரணங்களால் தொலைந்து விட்டால், கவலைப்படுவது இயல்புதான். ஆனால் சில நாட்களிலேயே இன்னொரு ஆதார் கார்டை ஆர்டர் செய்துவிடலாம். அதுவும் புதிய பாலிவினைல் குளோரைடு (பிவிசி) கார்டு, ஏடிஎம் கார்டு அல்லது கிரெடிட் கார்டு போன்றே இருக்கும், அதை நீங்கள் எளிதாக உங்கள் பர்ஸில் எடுத்துச் செல்லலாம்.
இந்த பிவிசி வகை ஆதார் கார்டுகளை ஆர்டர் செய்தாலும் டெலிவரி செய்யாமல் இருந்தனர். இனி ஆர்டர் செய்ததும் 30 நாட்களில் பிவிசி கார்டுகளை டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளனர். இனி ஆர்டர் செய்ததும் 30 நாட்களில் பிவிசி கார்டுகளை டெலிவரி செய்ய முடிவு செய்துள்ளனர். ஆதார் அமைப்பான UIDAi இதற்கான அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டது.
இதுமட்டுமின்றி, தற்போது பெரும்பாலானோர் பிவிசி ஆதார் அட்டையை எடுத்துச் செல்கின்றனர். இதற்கு ஸ்பீட் போஸ்ட் செலவும் சேர்த்து ரூ.50 மட்டுமே செலவழிக்க வேண்டும். இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் இப்போது ஆதார் அட்டையின் பாலிவினைல் குளோரைடு (PVC) அட்டையை வழங்குகிறது. PVC ஆதார் அட்டையை எவ்வாறு பெறுவது என்பது பற்றி கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
எப்படி பெறுவது?
சாதாரண கார்டை விட இந்த கார்ட் வலிமையாக இருக்கும். அதேபோல் நீண்ட காலம் உழைக்கும். பாதுகாப்பானதும் கூட. uidai.gov.in அல்லது https://myaadhaar.uidai.gov.in/genricPVC மூலம் ஆதார் எண் அல்லது விர்ச்சுவல் ஐடி அல்லது என்ரோல்மென்ட் ஐடி மூலம் இந்த அட்டையை பெற முடியும். இதற்கு கட்டணம் ரூ. 50 செலுத்தி மேற்கண்ட பக்கத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். அல்லது மை ஆதார் என்ற செயலியில் உங்கள் ஆதார் எண்ணை வைத்து லாகின் செய்து, அதிலேயே பணம் செலுத்தி பிவிசி கார்டை பெற முடியும்.
இந்திய அஞ்சல் சேவையின் ஸ்பீட் போஸ்ட் சேவை மூலம் ஆதார் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவரியில் வசிப்பவருக்கு டெலிவரி செய்யப்படும். 7 நாட்களில் இந்த புதிய பிவிசி ஆதாரை நீங்கள் உங்கள் வீட்டு விலாசத்தில் பெற முடியும்.
பாதுகாப்பு அம்சங்கள் :
- டேம்பர் ப்ரூஃப் QR குறியீடு
- ஹாலோகிராம்
- மைக்ரோ எழுத்து
- கோஷ்ட் படம்
- வெளியீட்டு தேதி & அச்சு தேதி
- பாதுகாப்பிற்கான Guilloche பேட்டர்ன்
- ஆதார் லோகோ
Read more ; UPI பேமெண்ட்… மோசடிகளில் சிக்காமல் இருக்க இதை ஃபாலோ பண்ணுங்க போதும்!