தம்பதிகளே..!! உடலுறவு வைத்துக் கொள்வதற்கு முன் கட்டாயம் இதை செய்யுங்கள்..!! இல்லையென்றால் பாதிப்பு உங்களுக்குத்தான்..!!
சாப்பிடுவதற்கு முன் கைகளை கழுவுவதும், கழிவறைக்கு சென்று வந்த பின்பு கைகளை கழுவுவதும் தான் பொதுவாக நாம் கடைபிடிக்கின்ற வழக்கம். இது தவிர, கொரோனா காலத்தில் அவ்வபோது கைகளை கழுவும் பழக்கத்தை கடைப்பிடித்தோம். இது தவிர மற்ற சமயங்களில் கைகளை கழுவும் பழக்கம் பெரும்பாலானோருக்கு இல்லை. ஆனால், உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசை நம் மனதில் தோன்றிய பிறகு உடனடியாக நாம் செய்ய வேண்டிய காரியம் கைகளை கழுவுவதுதான். ஏனென்றால், உடலுறவின்போது பிறப்புறுப்புகளின் மீது நம் கைகளை பயன்படுத்துகின்ற சமயத்தில் கைகளில் உள்ள கிருமிகள் நம் உடலுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளது.
கைகள் மூலமாக தொற்றுகள் பரவும் அபாயம்...
பொதுவாக நம் கைகளின் வழியாக பாக்டீரியா மற்றும் வைரஸ் ஆகியவை பரவக் கூடும். இவற்றில் எம்.ஆர்.எஸ்.ஏ., இ-கோலி, சல்மோனெல்லா, நோரோ வைரஸ், ரோடா வைரஸ், சளி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்கள் போன்றவை நம் கைகளின் வழியே பரவும் தொற்றுகள் ஆகும்.
செல்ஃபோனில் இருக்கும் ஆபத்து...
இரவில் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் தம்பதியர்கள் பலரும், மாலையில் வீடு திரும்பியவுடன் அல்லது இரவு உணவுக்கு முன்னர் குளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு குளித்துவிட்டால் நம் கைகள் சுத்தமாக இருக்கும் என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால் குளித்த பிறகு நாம் கிருமிகள் நிறைந்த வீட்டின் தரை தளங்கள், சோஃபா போன்றவற்றில் அமர்ந்து எழுகிறோம். முக்கியமாக தாம்பத்ய உறவுக்கு முன்னதாக கடைசி நொடி வரையிலும் செல்ஃபோன் பயன்படுத்தும் பழக்கமும் இருக்கிறது. செல்ஃபோன்களில் மிக அதிகப்படியான கிருமிகள் இருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
வளர்ப்பு பிராணிகளிடம் இருந்து ஜாக்கிரதை...
வீட்டில் நாய், பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்றுகளின் மூலமாக 240 வகையான நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாயை இரவில் தொட்டு, கட்டி போட்டுவிட்டு, அப்படியே படுக்கையறைக்கு செல்லும் பட்சத்தில், பிறப்புறுப்புகளில் ரிங்வார்ம்ஸ் அல்லது ரவுண்ட்வார்ம்ஸ் பரவக் கூடும்.
முறையாக சுத்தம் செய்ய வேண்டும்...
கைகளை சுத்தம் செய்கிறேன் என்ற பெயரில் பைப்பில் கையை நீட்டி விட்டு வருவது போன்ற செயல்களை செய்யக்கூடாது. கைகளின் ஒவ்வொரு பகுதிகளிலும், குறிப்பாக விரல் இடைவெளிகளில் முறைப்படி தேய்த்து கழுவ வேண்டும். குறைந்தபட்சம் 20 நொடிகள் கைகளை கழுவ வேண்டும்.
சானிடைசர் பயன்படுத்தலாமா..?
ஆல்கஹால் கலந்த சானிடைசர் அனைத்து விதமான தொற்றுகளையும் அழித்துவிடும் என்று உறுதியாக கூறிவிட முடியாது. எனவே, கைகளை கழுவுவதற்கு சாதாரண சோப் மற்றும் தண்ணீர் ஆகியவையே போதுமானது. உங்கள் கை விரல்களில் நகங்களை வாரம் ஒருமுறையாவது வெட்டிவிடுங்கள்.
Read More : சென்னையில் கரையை கடக்கும் ஃபெங்கல் புயல்..? பாதிப்பு பயங்கரமா இருக்கும்..? வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை..!!