நீண்டகாலமாக விடுப்பில் இருக்கும் மாணவர்கள்..!! பொதுத்தேர்வில் வைக்கப்போகும் ஆப்பு..!! வெளியான அதிரடி உத்தரவு..!!
அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், புதுச்சேரி கல்வி இணை இயக்குனர், அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், 2023 - 24ஆம் கல்வியாண்டில் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல், கடந்த கல்வியாண்டு, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் பெயர் பட்டியலைக் கொண்டே தயார் செய்யப்பட உள்ளது.
ஆகையால், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் நவம்பர் 3ஆம் முதல் அரசு தேர்வுகள் இயக்கத்தின் www.dge.tn.gov.in இணையதளத்தில், அரசுத் தேர்வுகள் இயக்கத்தால் வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் Password பயன்படுத்தி, பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் நிரந்தரப் பதிவெண், பெயர், பிறந்தத்தேதி, பாடத் தொகுதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு மாணவர்களின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், புகைப்படம், பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் இருந்தால், 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் இணைத்து நவம்பர் 10ஆம் தேதிக்குள் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே மாணவரின் பெயர் மற்றும் பிறந்த தேதியில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
மேலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியப் பிறகு அரசிதழில் பெயர் மாற்றம் செய்த மாணவரின் பெயர் மட்டும் மாற்றம் செய்ய அனுமதிக்கப்படும். 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியப் பின்னர் மாணவர் வேறு பள்ளியில் சேர்ந்தால், அவரின் பெயர் பட்டியல் மாறியப் பள்ளியில் சேர்க்க முடியும். ஆனால், 11ஆம் வகுப்பில் படித்த பாடத்தொகுப்பு, பயிற்று மொழி, மொழிப்பாடம் ஆகியவற்றில் எக்காரணம் கொண்டும் மாற்றம் செய்ய முடியாது.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பின்னர் பள்ளி மாற்றுச்சான்றிதழ் பெறாத நிலையில், 12ஆம் வகுப்பு பெயர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்ய அனுமதி வழங்கப்படாது. பள்ளி மாற்றுச்சான்றிதழ் வழங்காமல் நீண்டகாலம் விடுப்பில் இருக்கும் மாணவர் பெயரை பட்டியில் இருந்து நீக்கமும் செய்யக்கூடாது. நீண்டகாலம் விடுப்பில் இருக்கும் மாணவர் பெயரை 12ஆம் வகுப்பு பெயர் பட்டியலில் கட்டாயம் நீக்கம் செய்ய வேண்டும்.
பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை 9498383081 / 9498383075 என்ற எண்ணில் தொடர்புக்கொண்டு தீர்த்துக் கொள்ளலாம். கடந்தாண்டு பொதுத்தேர்வை 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாமல் ஆப்சென்ட் ஆன நிலையில், இந்த முறை மாணவர்களின் வருகைப் பதிவை கணக்கில் கொள்ள வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.