முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

மாணவர்களே..!! பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா..? அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!!

01:24 PM Jan 09, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நாடாளுமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தலால் பொதுத்தேர்வு பாதிக்கப்படுமா என்ற சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "பொதுவாகவே தேர்தல் தேதி அறிவிக்கும்போது ஒரு மாநிலத்தின் தேர்வு தேதிகளுக்கு தகுந்தாற்போல் அறிவிக்கப்படும். இது வழக்கமான ஒன்று. ஏனென்றால், இது மாணவர்களின் நலன் சார்ந்த விஷயம். மார்ச் மாதம் ஆரம்பிக்கும் தேர்வுகளுக்கு மாணவர்கள் ஒரு வருடமாக தயாராவார்கள் என்பதால், தேர்வு தேதிக்கு தகுந்தாற்போலவே தேர்தல் தேதி இருக்கும்.

ஏற்கனவே ஜாக்டோ - ஜியோ குழுவினர் 12 விதமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். நேற்றுகூட இதுதொடர்பாக ஆலோசனை நடத்தினோம். இன்றும் ஆலோசனை நடக்கவுள்ளது. ஆலோசனையின் முடிவுகளை முதல்வர் மற்றும் நிதித் துறை கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும்” என்று தெரிவித்தார்.

Tags :
அமைச்சர் அன்பில் மகேஷ்நாடாளுமன்ற தேர்தல்பொதுத்தேர்வுமாணவர்கள்
Advertisement
Next Article