For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’அமரன்’ திரைப்படத்தில் இருந்து மாணவரின் செல்போன் நம்பர் நீக்கம்..!! சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்..!!

Rajkamal's company has announced that the student's cell phone number shown in the movie Amaran has been removed.
02:59 PM Dec 06, 2024 IST | Chella
’அமரன்’ திரைப்படத்தில் இருந்து மாணவரின் செல்போன் நம்பர் நீக்கம்     சென்னை ஐகோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
Advertisement

அமரன் திரைப்படத்தில் காட்டப்பட்ட மாணவரின் செல்போன் நம்பர் நீக்கப்பட்டதாக ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான படம் அமரன். இப்படத்தில் சாய்பல்லவியின் மொபைல் எண் என்று தன்னுடயை எண்ணை காண்பித்ததால், பலர் அந்த எண்ணை தொடர்பு கொண்டனர்.

இதனால், தனக்கு மன உளைச்சல் ஏற்பட்டதாக கூறி சென்னை அழ்வார் திருநகரை சேர்ந்த வாகீசன் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ”எனக்கு தொடர்ச்சியாக ஆயிரக்கணக்கான அழைப்புகள் வருகிறது. தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை, படிக்க முடியவில்லை, பயணிக்க முடியவில்லை. இதனால், ஒரு கோடியே 10 லட்ச ரூபாயை இழப்பீடாக வழங்க ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும், ராஜ்குமார் பெரியசாமிக்கும் உத்தரவிட வேண்டுமென” கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சவுந்தர் முன் விசாரணைக்கு வந்த போது, தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மனுதாரரின் மொபைல் எண் இடம் பெற்றிருந்த காட்சி நீக்கப்பட்டு, தணிக்கை குழுவிடம் புதிய தணிக்கை சான்று பெறப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தார். ஆனால், மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, இன்னும் தொடர்ந்து அழைப்புகள் வருவதாக கூறினார்.

இதையடுத்து, தொடர் அழைப்புகளால் மனுதாரரின் தனிப்பட்ட உரிமை பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான் என்ற போதும், அதற்கு பொது சட்டத்தின் கீழ் தான் நிவாரணம் கோர முடியும். ரிட் வழக்கில் இழப்பீடு வழங்கும்படி உத்தரவிட முடியாது. எனவே, இந்த மனுவுக்கு தணிக்கை குழு, ராஜ்கமல் பிலிம்ஸ், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 20ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Read More : அதிர்ச்சி..!! நடிகர் சிவராஜ்குமாருக்கு புற்றுநோய் பாதிப்பா..? அமெரிக்காவில் தீவிர சிகிச்சை..!! அவரே வெளியிட்ட பரபரப்பு அறிக்கை..!!

Tags :
Advertisement