முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தூள்...! மாதம் ரூ.1000 தொகையுடன் இலவச பயிற்சி வகுப்பு... ஜூன் 20-ம் தேதி முதல் விண்ணப்பம்...!

Students can apply from 20th June for free training course with educational stipend for their development.
06:15 AM Jun 12, 2024 IST | Vignesh
Advertisement

பட்டியலின மாணவர்களின் மேம்பாட்டிற்காக கல்வி உதவி தொகை தொகையுடன் கூடிய இலவச பயிற்சி வகுப்புக்கு ஜூன் 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

இது குறித்து அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது, இந்திய அரசு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் - DGE, ஆல் கிண்டி சென்னை நிறுவப்பட்டுள்ளது. படித்த வேலையற்ற SC/ST பிரிவைச் சேர்ந்த வேலைதேடும் நபவர்களுக்கும் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கும் இம்மையத்தின் மூலம் வழங்கப்படும் ஓராண்டு கால உதவித் தொகையுடன் கூடிய சிறப்பு இலவச சுருக்கெழுத்து, கணினி, தட்டச்சு மற்றும் போட்டித்தேர்வு ஆகியவற்றில் பயிற்சி இந்தாண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் தலைசிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படவுள்ளது.

இந்த இலவச பயிற்சியில் சேர ஆர்வமுள்ள 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது பட்டய படிப்பை முடித்த மாணவர்களுக்கு விண்ணப்பங்கள் இம்மையத்தில் வழங்கப்படுகிறது. சிறப்பு பயிற்சிக்கான வயது வரம்பு 18-27 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.1000/- உதவித்தொகை மற்றும் இலவச போட்டித்தேர்வு பயிற்சி புத்தகங்கள் மற்றும் எழுது பொருள்கள் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் 20 ஜூன் 2024 வரை பெறப்படும்.

இந்த அறிய வாய்ப்பினை அனைத்து SC/ST மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் விபரங்களுக்கு துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், கீழ் தளம் தமிழ் நாடு வேலைவாய்ப்பு அலுவலகம் வி.கா இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் கிண்டி சென்னை தொலைபேசி எண்: 044-24615112 என்ற முகவரியை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
free coachingScholarshipSt sctn government
Advertisement
Next Article