சீமானுக்கு சைலண்டா ஆப்பு வைத்த நிர்வாகிகள்.. தர்மபுரியில் கூட்டோடு விலகல்..!!
நாம் தமிழர் கட்சியிலிருந்து சமீப காலமாக நிர்வாகிகள் பலரும் விலகி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள் 10 பேர் விலகுவதாக அறிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா, பொருளாளர் சுரேஷ், துணை செயலாளர் வேடியப்பன், இணை செயலாளர் முருகேசன், பாப்பிரெட்டிப்பட்டி பொருளாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் 10 பேர், நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். தொடர்ந்து நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் மாதம், 7-ம் தேதி நாம் தமிழர்க் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்டச் செயலாளர் தேவேந்திரன் கட்சியின் தலைமை மீது அதிருப்தி தெரிவித்தும் பல்வேறு புகார்களை கூறியும் கட்சியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து நவம்பர் 14-ம் தேதி நெல்லை மாவட்ட நாதக இளைஞரணி தலைவர் பர்வீன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கத்யு.