முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

லிவிங் டூ கெதரால் விடுதியிலேயே குழந்தை பெற்றெடுத்த மாணவி..!! தருமபுரியில் அதிர்ச்சி சம்பவம்..!!

02:19 PM Feb 15, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தருமபுரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் விடுதியில் மாணவி ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தருமபுரி மாவட்டம் ஒட்டப்பட்டியில் உள்ள ஆதிதிராவிடர் விடுதியில் தங்கி, அரசு கல்லூரிக்கு தினந்தோறும் சென்று படித்து வந்த மாணவி ஒருவர், விடுதியில் தங்கியிருந்த போது பிப்ரவரி 13ஆம் தேதி அதிகாலையில் கடும் வயிற்று வலியால் துடித்துள்ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த விடுதி காப்பாளர், கல்லூரி மாணவி பிரசவ வலியால் துடிப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சற்று நேரத்தில், கல்லூரி மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது.

உடனடியாக விடுதி காப்பாளர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த விசாரணையில், மனோஜ் என்ற 21 வயது இளைஞருடன் மாணவி லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அதன் பின்னர், விடுதி நிர்வாகத்தினர், மாணவிக்கு குழந்தை பிறந்தது குறித்தும், மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருப்பது குறித்தும் ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இளைஞர் மனோஜூக்கும், மாணவியின் குடும்பத்தினருக்கும் போலீசார் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இரு தரப்பினரும் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்த நிலையில், இதுவரை இது குறித்து எந்தவொரு புகாரும் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.
மாணவி ஆதிதிராவிடர் விடுதியில் சேரும் போதே 2 மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும், இது குறித்து மாணவியிடம் விடுதி நிர்வாகத்தினர் கேட்டபோது, தன்னுடைய உடல்வாகு இயல்பிலேயே இப்படித்தான் எனக் கூறி மாணவி, கர்ப்பமானதை மூடி மறைத்ததாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் தற்போது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
அரசு கல்லூரிஆதிதிராவிடர் விடுதிகர்ப்பம்தருமபுரி மாவட்டம்மாணவிலிவிங் டூ கெதர்
Advertisement
Next Article