மாணவி பலாத்கார விவகாரம் எதிரொலி.. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட அண்ணா பல்கலைகழகம்..!!
அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இவர் மீது பாலியல் சீண்டல், கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும், இவர் திமுகவைச் சேர்ந்தவர் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைகழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளிட்யிட்ட அறிக்கையில், “கட்டுமானத் தொழிலாளர்கள் வேலைகளை முடித்த பிறகு பல்கலை. வளாகத்தில் தங்கக் கூடாது. பல்கலை. வளாகத்தில் வெளிநபர்களின் வாகனம் கண்டறியப்பட்டால் போலீசில் புகார் அளிக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான கமிட்டி ஒவ்வொரு மாதமும் கூடி குறைகளை கேட்டறிய வேண்டும்” எனவும் பல்கலை. பதிவாளர் தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலை. வளாகத்தில் உள்ள விடுதி, உணவகம் மற்றும் வகுப்பு நேரத்தில் மாற்றமில்லை என பல்கலை. பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Read more ; OYO Hotel | இனி திருமணம் ஆகாத ஜோடிகளுக்கு அனுமதி கிடையாது.. செக்-இன் விதிகளின் மாற்றம் கொண்டு வந்த OYO..!!