TVK Vijay : மாணவி வன்கொடுமை விவகாரம்.. ஆளுநர் ரவியை நேரில் சந்தித்து புகார் மனு அளித்த தவெக தலைவர் விஜய்..!!
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து த.வெ.க தலைவர் விஜய் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து மனு வழங்கியுள்ளார். மாணவி வன்கொடுமை வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக, த.வெ.க தலைவர் விஜய் இன்று காலை நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பாக தமிழக பெண்களுக்கு கடிதம் எழுதினார். அதில் அன்புத் தங்கைகளுக்கு அண்ணனாகவும் அரணாகவும் இருப்பேன் என்றும் தாய்மார்கள், என்னருமைத் தங்கைகள், பெண் குழந்தைகள் என அனைத்துத் தரப்புப் பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழங்கு சீர்கேட்டு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளைக் கண்டு, உங்கள் அண்ணனாக மன அழுத்தத்திற்கும் சொல்ல முடியாத வேதனைக்கும் ஆளாகிறேன். மேலும் எல்லா சூழல்களிலும், நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன் என்றும் இக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
Read more ; குறைந்த காலத்தில் 18 கிலோ எடையை குறைத்த இளம் பெண்.. இதுதான் வெயிட் லாஸ் சீக்ரெட்டாம்..!!