ஐ லவ் யூ டீச்சர்.. என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? - ஆன்லைன் வகுப்பில் மாணவன் செய்த செயல்..!!
மாணவர்-ஆசிரியர் உறவு பரஸ்பர மரியாதைக்குரியது. ஆனால் சமீப காலமாக மாணவன் ஆசிரியர் இடையேயான காதல் குறித்த செய்திகளை அடிக்கடி செய்தி தாள்களில் படிக்கிறோம். அதே போன்ற ஒரு சம்பவம் இப்போது நடந்துள்ளது. அதுதொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஆன்லைன் வகுப்பு நடந்து வருகிறது. ஒரு மாணவன் ஆசிரியரிடன் மேம், உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என கேள்வி எழுப்புகிறான்.
அதற்கு அந்த ஆசிரியர் இல்லை என பதில் அளிக்க, உடனே அந்த மாணவன் ஐ லவ் யூ மேம் என கூறியுள்ளான். அதற்கு அந்த ஆசிரியர் அன்பால் நான் அனைத்து மாணவர்களையும் நேசிக்கிறேன் என பதில் அளிக்க, உடனே அந்த மாணவன் என்ன திருமணம் செய்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளான். எந்த நோக்கத்தில் மாணவன் கூறினான் என்பது சரியாக சொல்ல முடியவில்லை. ஆனால், இந்த வீடியோவை பதிவு செய்த ஆசிரியர் இணையத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவை இதுவரை, 1.4 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். வீடியோவை பார்த்த பலரும் இதற்கு எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இணையத்தில் இதுபோன்ற வீடியோக்களை பதிவிட்டால் லைக்ஸ் அதிகம் கிடைக்கும் என்பதால் ஆசிரியர் இப்படி செய்துள்ளார் என ஒரு பயனர் பதிவிட்டுள்ளார். மற்றோரு பயனர் மாணவன் விளையாட்டுக்காக கூறியதை சர்ச்சையாக்காதீர்கள் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more ; பார்வையை மீட்டெடுக்கும் எலோன் மஸ்க்கின் பிளைண்ட்சைட் சாதனம்..!! – FDA ஒப்புதல்