7 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!! மீண்டும் கனமழை எச்சரிக்கை..!! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 24ஆம் தேதியான நாளை தமிழக வட மாவட்டங்களின் கடலோர பகுதி, தெற்கு ஆந்திரா கடலோர பகுதியை நோக்கி வரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. திடீர் காற்று, மழை உருவாகக் கூடிய சூழலை இந்த எச்சரிக்கை கூண்டு குறிக்கிறது.
மீண்டும் கனமழை
வரும் 24ஆம் தேதி வடகடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், மற்ற தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதுவும் குறிப்பாக செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.
அதேபோல், வரும் 25ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
Read More : “அம்பேத்கர் என்றால் பிளவர் அல்ல ஃபயர்”..!! அமைச்சர் அன்பில் மகேஷ் பரபரப்பு பேச்சு..!!