முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

புயல், வெள்ள பாதிப்பு!… பள்ளிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியீடு!

07:22 AM Dec 08, 2023 IST | 1newsnationuser3
Advertisement

புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், பள்ளிகளை திறப்பதற்கு முன்னதாக செய்ய வேண்டியவைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் பெரும் வெள்ளத்தால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. குறிப்பாக சென்னை மாநகரம் கடும் வெள்ளத்தில் தத்தளித்தது. உணவின்றி மக்கள் அவதியடைந்தனர். ஆங்காங்கே வெள்ள நீர் சூழ்ந்து கட்டடங்கள் சேதமடைந்தனர். இருப்பினும், அரசு சார்பில் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பு சென்னையில், நகரின் பல பகுதிகளில் மழைநீரை வடிக்கும் பணியில் ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், மழைநீரால் தொற்றுநோய்கள் பரவும் அபாயமும் எழுந்துள்ளது. இந்தநிலையில் பள்ளிகளை திறப்பதற்கு முன்னதாக செய்யவேண்டியவைகள் குறித்து பள்ளி கல்வித் துறை சார்பில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் அறிவொளி வெளியிட்ட அறிக்கையில், பள்ளிகள் திறக்கப்படும் முன்னதாக பள்ளி வளாகங்களை முழுமையாக தூய்மை செய்ய வேண்டும். முட்புதர்கள் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். சுற்றுச்சுவர்கள் ஈரப்பதத்துடன் இருக்கும் என்பதால் மாணவர்களை அருகில் செல்ல அனுமதிக்க கூடாது. மழையால் பாதிக்கப்பட்ட வகுப்புகளை பயன்படுத்தாமல் பூட்டி வைக்க வேண்டும்.

இடிக்க வேண்டிய கட்டிடங்கள் இருந்தால் அவற்றை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்க வேண்டும். வகுப்புகளில் உள்ள இருக்கைகளில் பூஞ்சை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். மின் இணைப்புகள் சரியாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், பள்ளி மேலாண்மை குழு உதவியுடன் பள்ளிகளுக்கு தேவையான வேறு சில அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

Tags :
Guidelines issued for schoolsகனமழைபள்ளிகள்புயல்வழிகாட்டுதல்கள் வெளியீடுவெள்ள பாதிப்பு
Advertisement
Next Article