இந்த பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல முடியாது.. மீறினால் சிறை தண்டனை விதிக்கப்படும்...
இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணிகளின் பாதுகாப்புக்காக இந்திய ரயில்வே பல விதிகளை செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பட்டாசு, போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல கடும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே விதிகளின்படி, ரயிலில் பயணிகள் எந்த வகையான பட்டாசுகளையும் எடுத்துச் செல்ல முடியாது. தடை செய்யப்பட்ட பொருட்களுடன் பயணிப்பது கண்டறியப்பட்டால், அவர் ரயில்வே சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். இதன் கீழ், 1,000 ரூபாய் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
எனவே ரயிலில் தடை செய்யப்பட்ட பொருட்களுடன் சிக்கினால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் இந்திய ரயில்வே பட்டாசு வெடித்துக்கொண்டு பயணிக்க வேண்டாம் என்று பயணிகளிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்து வருகிறது.
3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் : இந்திய ரயில்வேயின் விதிகளின்படி, பயணத்தின் போது தடைசெய்யப்பட்ட பொருட்களை பயணி ஒருவர் கொண்டு சென்றால், அவர் மீது ரயில்வே சட்டத்தின் 164வது பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இந்த பிரிவின் கீழ், ஒரு பயணிக்கு 1000 ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பட்டாசுகள் தடைசெய்யப்பட்ட பொருட்களின் பிரிவின் கீழ் வருவதால், ரயிலில் பட்டாசுகளுடன் பிடிபட்டால் நீங்கள் தண்டனைக்கு ஆளாவீர்கள்.
ரயில் பயணிகளின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் இதுபோன்ற பல பொருட்களை ரயிலில் கொண்டு செல்ல ரயில்வே தடை விதித்துள்ளது. இவை ரயிலில் தீவிபத்து ஏற்படும் அபாயம், ரயிலை அழுக்காக்குவது, பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது மற்றும் ரயில் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது.
வேறு எந்தெந்த பொருட்களுக்கு தடை? அடுப்பு, கேஸ் சிலிண்டர்கள், எரியக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள், அமிலம், துர்நாற்றம் வீசும் பொருட்கள், தோல் அல்லது ஈரமான தோல்கள், பொட்டலங்களில் கொண்டு வரப்படும் எண்ணெய் அல்லது கிரீஸ், உடைந்து கசிந்து சேதம் விளைவிக்கும் பொருட்கள் அல்லது பயணிகளுக்கு ரயில் பயணத்தின் போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே விதிகளின்படி, ரயிலில் பயணிகள் 20 கிலோ நெய்யை எடுத்துச் செல்லலாம், ஆனால் நெய்யை தகரப் பெட்டியில் சரியாகப் பேக் செய்ய வேண்டும் என்பது அவசியம்.
Read More : ட்ரெயின் மிஸ் பண்ணிட்டீங்களா? போர்டிங் ஸ்டேஷனை ஆன்லைனில் ஈஸியா மாற்றலாம்..!! எப்படி தெரியுமா?