"அபத்தமான போரை நிறுத்துங்கள்"!. இல்லையென்றால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும்!. புடினுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
Trump: ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடைபெற்று வரும் போர் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விளாடிமிர் புதினுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சட்ட விரோதமாக குடியேறியவர்கள் முதல் பனாமா கால்வாய் வரை பல முடிவுகள் இதில் அடங்கும். சமீபத்திய முன்னேற்றங்களில், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக, ரஷ்யாவிற்கு தீங்கு செய்ய விரும்பவில்லை என்று அதிபர் விளாடிமிர் புடினுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்துள்ளார், அதாவது, உக்ரைனில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர விளாடிமிர் புடின் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதற்கு ரஷ்யா ஒப்புக் கொள்ளாவிட்டால், இன்னும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ரஷ்யா-உக்ரைன் போரில் 'ஒரு ஒப்பந்தம் செய்யாவிட்டால்' வரி மற்றும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்,
இதுதொடர்பாக டிரம்ப் தனது இன்ஸ்டா பக்கத்தில், "நான் ரஷ்யாவை காயப்படுத்த விரும்பவில்லை. நான் ரஷ்ய மக்களை நேசிக்கிறேன், ஜனாதிபதி புட்டினுடன் எப்போதும் நல்ல உறவை கொண்டிருந்தேன், இது தீவிர இடதுசாரிகளின் ரஷ்யா. "60,000,000 உயிர்களை இழந்த இரண்டாம் உலகப் போரை வெல்ல ரஷ்யா எங்களுக்கு உதவியது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. இதையெல்லாம் சொல்லி, அதன் பொருளாதாரம் தோல்வியடைந்து வரும் ரஷ்யாவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் மற்றும் சமரசம் செய்து, இந்த அபத்தமான போரை நிறுத்துங்கள், இல்லையென்றால் இது இன்னும் மோசமாகிவிடும்.
விரைவில் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால், அமெரிக்காவிற்கும் பிற கூட்டாளி நாடுகளுக்கும் ரஷ்யா விற்கும் எந்தவொரு பொருட்களின் மீதும் அதிக அளவு வரிகள், வரிகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை விதிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை." நான் அதிபராக இருந்திருந்தால் இது ஒருபோதும் தொடங்கப்பட்டிருக்காது, மேலும் எளிதான வழி எப்போதும் சிறந்ததாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
Readmore: இங்கிலாந்தை அலறவிட்ட அபிஷேக் சர்மாவின் சரவெடி!. 13 ஓவரிலேயே மாஸ் வெற்றிபெற்ற இந்திய அணி!.