Stomach Cancer | இது அல்சர் இல்ல... வயிற்று புற்றுநோய்..!! உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா..?
இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் மற்றும் பெண்கள் என்று இருவருக்கும் புற்றுநோய் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதற்கு முதல் காரணம் அவர்களின் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் பழக்க வழக்கங்கள் தான். ஒரு சிலருக்கு குடும்பத்தில் யாருக்கேனும் புற்றுநோய் பாதிப்பு இருந்தால், அவர்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது. அந்த வரிசையில், வயிற்று புற்று நோய் ஏற்பட்டால் சில ஆரம்ப கால அறிகுறிகளை வைத்து நாம் கண்டறிய முடியும்.
பொதுவாகவே இந்த வயிற்று புற்றுநோய் ஏற்பட்டால் நம் வயிற்றின் உட்புறப் பகுதியில் இருந்து ஆரம்பித்து வெளிப்புற சுவர்களுக்கு புற்றுநோய் செல்கள் பரவி விடும். மேலும், இந்த புற்றுநோய் படிப்படியாக உடல் முழுவதும் பரவி உடல் உறுப்புகளை சேதம் அடைய செய்யும்.
அறிகுறிகள்: இந்த வயிற்று புற்றுநோய் பிரச்சனையின் அறிகுறிகள் பொதுவாக இரண்டு விதமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை அறிகுறிகள் மற்றும் முற்றிய நிலை அறிகுறிகள் ஆகும்.
ஆரம்பகட்ட அறிகுறிகள்: இந்த வயிற்று புற்றுநோய் ஏற்பட்டு ஆரம்ப நிலையில் ஒரு சில பேருக்கு எந்த விதமான அறிகுறிகளும் தெரியாது. ஆனால், இன்னும் சில நபர்களுக்கு வயிற்று புற்றுநோய் ஏற்பட்டால் முதலில் வயிற்றில் புற்றுநோய் கட்டி வளரத் தொடங்கும்.
வேறு சில அறிகுறிகள்: இந்த வயிற்று புற்றுநோய் ஏற்பட்ட நபர்களுக்கு அடிக்கடி பசி எடுக்காது என்பதால், உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்காது. இந்நிலையில், அவர்கள் பெரும்பாலான நேரங்களில் உடல் சோர்வாக உணர்வார்கள். மேலும், வயிற்று புற்று நோய் ஏற்படுவதால் தேவையான அளவு உணவு சாப்பிட முடியாது. இதனால் வயிற்றில் நீர் சேர்ந்து வயிறு உப்புதல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படும்.
உடல் எடை குறையும்: புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பசியின்மை காரணத்தினால் கொஞ்சமாக உணவு சாப்பிட்டால் கூட அவர்களுக்கு அதிகமாக உணவு சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்தும். இதனால் நாளடைவில் அவர்கள் உடல் எடை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.
பசியின்மை: குறிப்பாக வயிற்று புற்றுநோய் ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் பசியின்மை ஒரு முக்கிய அறிகுறியாகும். இந்த புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அடிக்கடி பசி உணர்வு ஏற்படாது.
செரிமான கோளாறு: வயிற்று புற்றுநோய் ஏற்படும்போது குமட்டல், வாந்தி, மலம் கழிக்கும் போது ரத்தம் வெளியேறுவது போன்ற செரிமான பிரச்சனைகள் உண்டாகும். இது போன்ற அறிகுறிகளை நீங்கள் கண்டறிந்தால் உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுவது நல்லது.
Read More : முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை..!!