முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

ஆப்பு வைக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள்..!! இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பு..!! வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவு..!!

According to Lancet, a famous British medical journal, 10 lakh deaths occur in India every year due to overuse of antibiotics.
01:44 PM Nov 09, 2024 IST | Chella
Advertisement

ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக உட்கொள்வதால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்வதாக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மருத்துவ ஆய்வு இதழான லான்செட் தெரிவித்துள்ளது.

Advertisement

பாக்டீரியா நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்த மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மருந்துகளே ஆன்டிபயாட்டிக்ஸ். இயற்கையாக நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தி செய்ய வேண்டிய வேலையை, ஆன்டிபயாட்டிக் மருந்து செய்கிறது. ஆன்டிபயாடிக்கை அதன் செயல்பாட்டின் அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

நம்முடைய உடலுக்குள் நுழைந்து நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை அழிக்கும் பணிகளைச் செய்யும் ஆன்டிபயாடிக், பாக்டீரிசைடல் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல், நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை மட்டும் தடுத்து நிறுத்தக்கூடிய ஆன்டிபயாட்டிக் பாக்டீரியோஸ்டேட்டிக் என்று அழைக்கப்படுகிறது. ஆன்டிபயாட்டிக் மருந்து ஒருவருக்குத் தேவையா? தேவையில்லையா? என்பதை அறிய நோயாளியின் இரத்தம், சிறுநீர், புண் சீழ் போன்றவற்றில் உள்ள கிருமிகளை வைத்து, அவை எந்த மருந்துக்குக் கட்டுப்படுகின்றன என்று பரிசோதிக்கப்படும்.

இந்த பரிசோதனை முடிவுகள் தெரிய 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை ஆகும். பரிசோதனையின் அடிப்படையில் வயது, உடல் எடை, நோய் பாதிப்பின் தன்மை ஆகியவற்றுக்கு ஏற்றாற் போல மருந்துகளின் அளவு பரிந்துரை செய்யப்படும். ஆனால், மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ளுதல் சரியானது அல்ல.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை நோயாளிகளுக்கு எந்த அளவிற்கு பயன்படுத்த வேண்டும் என தனித்தனி விதிகள் இருக்கின்றன. மருத்துவர்களின் பரிந்துரையின்றி மருந்து, மாத்திரைகளை நீண்ட காலம் உட்கொள்வது சிக்கல் தான் என்று மருத்துவ ஆய்வு முடிவுகள் கூறுகிறது.

Read More : வாகன ஓட்டிகளே..!! டிரைவிங் லைசென்ஸை இனி இவ்வளவு ஈசியா வாங்கலாமா..? ஆன்லைனில் உடனே அப்ளை பண்ணுங்க..!!

Tags :
Antibioticsஆன்டிபயாடிக்மாத்திரைகள்
Advertisement
Next Article