முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நீண்ட காலமாக செயல்பட்டு வரும் இ-சேவை மையங்கள்... தமிழக அரசு முக்கிய அறிவிப்பு...!

Steps have been taken to benefit the public through Chennai district e-service centers.
07:35 AM Aug 30, 2024 IST | Vignesh
Advertisement

சென்னை மாவட்ட இ-சேவை மையங்கள் மூலம் பொதுமக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஒரு அரசு துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் மூலமாக 530 அரசு இசேவை மையங்கள் மற்றும் 328 நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்கள் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வருவாய் துறை சார்ந்த சான்றிதழ்கள் மற்றும் சமுக நலன் சார்ந்த 170க்கும் மேற்பட்ட சேவைகளை ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்து பொதுமக்களுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது.

Advertisement

இதேபோல நிரந்த ஆதார் சேர்க்கை மையங்கள் மூலமாக புதிய ஆதார் பதிவுகள் மற்றும் ஆதார் திருத்தங்கள் போன்ற சேவைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை மாவட்டத்தில் தலைமைச் செயலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள். பெருநகர சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகம், மண்டல அலுவலகங்கள், மற்றும் கோட்டம்/வார்டு அலுவலகங்களில் இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் சென்னை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு இ-சேவை மையங்கள் மூலமாக வெளிமுகமை நிறுவனம் மூலம் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்து வரும் தரவு உள்ளீட்டாளர்கள் மூலமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் குறைபாடுகள் உள்ளதாக அரசின் கவனத்திற்கு வந்தது.

பொதுமக்களுக்கு சிறந்த முறையில் சேவை வழங்க ஏதுவாக, தற்போது சென்னை மாவட்டத்தில் ஒரே இடத்தில் நீண்ட காலமாகப் பணிபுரிந்து வரும் 44 அரசு இ-சேவை மையங்களைச் சார்ந்த முற்றிலும் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தரவு உள்ளீட்டாளர்களை (Out Sourced Data Entry Operators) சென்னை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் கீழ் செயல்படும் அரசு இ-சேவை மையங்களுக்கு மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
ChennaiE sevaitn government
Advertisement
Next Article