CAA சட்டத்திற்கு எதிராக கொந்தளித்த எஸ்டிபிஐ..!! தமிழ்நாடு முழுவதும் உஷார்படுத்தப்படும் போலீஸ்..!!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக எஸ்டிபிஐ கட்சி போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது.
2019 டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகளை மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ளது. மக்களவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சிஏஏ சட்ட அறிவிக்கையை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றன. கொரோனா தொற்று காரணமாக போராட்டங்கள் ஓய்ந்திருந்தன.
சட்டம் நிறைவேற்றப்பட்டு 4 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது அதனை மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது. இதனால், மீண்டும் நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. சிஏஏ சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என பல்வேறு கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதிமுக கூட்டணியில் இருக்கும் எஸ்டிபிஐ கட்சி, சிஏஏ சட்டம் அமலுக்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. மத்திய பாஜக அரசின் மதவாத சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என அக்கட்சித் தலைவர் நெல்லை முபாரக் கூறியுள்ளார்.
சிஏஏ சட்டம் அமலானதை தொடர்ந்து, எஸ்டிபிஐ கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், சிஏஏ சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, சிஏஏ சட்டத்தை எதிர்க்கிறது எஸ்டிபிஐ என்றும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
Read More : பொன்முடிக்கு Green Signal..!! மீண்டும் எம்.எல்.ஏ. பதவி..!! சட்டப்பேரவை செயலகம் முக்கிய அறிவிப்பு..!!