முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

தென் மாவட்ட மக்களே பாதுகாப்பா இருங்க..!! அனைத்து சேவைகளும் முடக்கம்..!! அமைச்சர் எச்சரிக்கை..!!

10:21 AM Dec 18, 2023 IST | 1newsnationuser6
Advertisement

நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று அதிகாலை துவங்கிய கனமழை தற்பொழுது வரை அதி தீவிர கனமழையாக பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேரு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் பேசுகையில், நேற்று 17ஆம் தேதி மற்றும் இன்று 18ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை பணிகள் செய்வதற்கு மாவட்டம் நிர்வாகம் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றிட தனித்தனியாக அமைச்சர்களை முதல்வர் நியமனம் செய்துள்ளார்.

தென்காசி மாவட்டத்திற்கு நான், நெல்லை மாவட்டத்திற்கு தங்கம் தென்னரசு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மனோதங்கராஜ் உள்ளிட்ட அமைச்சர்களும், மாவட்டத்திற்கு 2 ஐஏஎஸ் அதிகாரிகள் வீதம் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும், எவ்வித சுணக்கமும் இல்லாமல் பணிகள் மேற்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டத்தில் அணைகளில் இருந்து தாமிரபரணியில் தண்ணீர் திறந்து விடப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 அணைகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றோரங்களில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்க வைப்பதற்காக நெல்லையில் 19 முகாம்களும், கன்னியாகுமரியில் 4 முகாம்களும், தூத்துக்குடியில் 2 முகாம்களும், தென்காசியில் ஒரு முகாமும் அமைக்கப்பட்டு தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Tags :
அதி கனமழைகன்னியாகுமரி மாவட்டம்தூத்துக்குடிநெல்லை மாவட்டம்
Advertisement
Next Article