வானில் இருந்து இறங்கி கடல் நீரில் மிதக்கும் நட்சத்திரங்கள்!… எந்த இடத்தில் தெரியுமா?... எப்படி நிகழ்கிறது?
Maldives: சுற்றுலா பயணிகள் காண விரும்பு நட்சத்திரங்களின் கடல் என்ற இடம் மாலத்தீவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இங்கு இரவு நேரங்களில் இரவு நேரங்களில் விண்மீன்கள் வானில் இருந்து கீழே இறங்கி கடல் நீரில் மிதப்பது போன்ற காட்சி தோன்றும். இது பயோலுமினசெண்ட் பிளாங்க்டன் எனப்படும் உயிரினங்களால் ஏற்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றன. இந்த காட்சியை ஏப்ரல் - அக்டோபர் காலகட்டத்தில் காணமுடியும்.
பயோலுமினெசென்ஸ் என்பது ஒரு வேதியியல் எதிர்வினை. இது ஒளி அலைகளை உருவாக்குகிறது. பிளாங்க்டன் என்பது நுண்ணிய உயிரினங்களின் குழுவைக் குறிக்கும் சொல். அந்த உயிரினங்களால் தங்கள் இயக்கங்களை கட்டுப்படுத்த முடியாது. அவை அலைகளில் மிதக்கின்றன. அதேவேளையில் அனைத்து நுண்ணுயிரிகளும் ஒளியை வெளியிடுவதில்லை.
"பயோலுமினசென்ட் பிளாங்க்டனைக் காண்பதற்கான குறிப்பிட்ட பகுதி என எதுவும் இல்லை. மாலத்தீவில் அல்லது உலகில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் பிளாங்க்டனைக் காணலாம். மாலத்தீவில் உள்ள பல தீவுகளில் பலமுறை பயோலுமினசென்ட் பிளாங்க்டன்களைப் பார்க்க முடிந்ததை நான் எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன் என்று கடல் உயிரியலாளரும் வனவிலங்கு தொகுப்பாளருமான லாரன் ஆர்தர் கூறினார்.
ஏப்ரல் - அக்டோபர் தென்மேற்கு பருவமழையின் போது கடல் நீரோட்டங்களால் தென்மேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி பிளாங்க்டன்கள் இழுத்துச் செல்லப்படும், இதனால் அவற்றை அதிக எண்ணிக்கையில் காண முடியும். நிலத்தை விட நீர்நிலைகளில் அவற்றைப் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
அமாவாசை நேரத்தில் இந்த பயோலுமினசென்ட் பிளாங்க்டனை பார்க்கலாம். வானத்தில் நிலவொளி இருப்பதில்லை, முழுமையாக இருள் சூழ்ந்திருக்கும். முன்னதாக, 2013ஆம் ஆண்டில், வதூ, ரிசார்ட் தீவுகளின் கடற்கரைகளில் அற்புதமான பயோலுமினசென்ட் பிளாங்க்டன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இவை இன்றும் இணையத்தில் பிரபலமாக உள்ளன.
Readmore: இருள் சூழும் முழு சூரிய கிரகணம்!… இந்தியாவில் காண முடியுமா?… எங்கெல்லாம் பார்க்கலாம்?