For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

DMK: முத்திரை தாள் விவகாரம்..‌.! அண்ணாமலைக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி..!

06:12 AM Mar 29, 2024 IST | Vignesh
dmk  முத்திரை தாள் விவகாரம்  ‌   அண்ணாமலைக்கு திமுக எம்பி வில்சன் கேள்வி
Advertisement

நீதித்துறை அல்லாத முத்திரைத் தாள் மற்றும் நீதிமன்ற கட்டண முத்திரைத் தாளுக்கு இடையிலான வித்தியாசத்தை அறியாத ஒருவர் எந்த வகையான ஐபிஎஸ் அதிகாரி..? என திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement

அண்ணாமலையின் வேட்புமனுவுடன் இருந்த பிரமாண பத்திரம் நீதிமன்றத்துக்குப் பயன்படுத்தும் பத்திரத்தில் இருந்தது. ஆனால் நீதிமன்ற பயன்பாட்டுக்கு அல்லாத பத்திரம் மூலம் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டும். தவறான பத்திரத்தை இணைத்திருந்த நிலையில், மனுக்கள் பரிசீலனையின்போது மாவட்டத் தேர்தல் அலுவலர் இதை கவனிக்கத் தவறிவிட்டார்.

எனவே, அண்ணாமலையின் மனுவை நிராகரிப்பதுடன், அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாமலை தரப்பில் இரண்டு வேட்புமனுக்களுக்கும் ஒரே பிரமாண பத்திரம் தான் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. காலையில் ஒரு மனுவை நிராகரித்த தேர்தல் அலுவலர் மற்றொன்றை ஏற்பதாக கூறினார் என எதிர் கட்சிகள் குற்றச்சாட்டு முன் வைத்து வருகின்றனர்.

திமுக எம்பி வில்சன் கேள்வி

தமிழ்நாட்டில் உள்ள ஒரு அரசியல்வாதி தான் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று அடிக்கடி பெருமை பேசியும் மற்றவர்களை UPSC தேர்வு எழுதக்கூறியும் சவால் விடுகிறார். நீதித்துறை அல்லாத முத்திரைத் தாள் மற்றும் நீதிமன்ற கட்டண முத்திரைத் தாளுக்கு இடையிலான வித்தியாசத்தை அறியாத ஒருவர் எந்த வகையான ஐபிஎஸ் அதிகாரி..?

இப்படிப்பட்ட ஒருவர் நாடாளுமன்றத்தில் கோவை மக்களை எப்படி பிரதிநிதித்துவப்படுத்த முடியும்..?முத்திரைத் தாளுக்கான வேறுபாடுகளை அறியாத போது, சட்டங்களையும் கொள்கைகளையும் இயற்றுவதில் அவர் எவ்வாறு திறம்பட பங்களிக்க முடியும்..? என் திமுக எம்பி வில்சன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement