முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

apologized: பொங்கி எழுந்த ஸ்டாலின்!... பகிரங்க மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்!

06:35 AM Mar 20, 2024 IST | 1newsnationuser3
Advertisement

apologized: பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரத்தில், கண்டனங்கள் எழுந்ததையடுத்து மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

Advertisement

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி இருந்தன. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எனப் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேச்சுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் அவர் மன்னிப்பு கோரியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “என் தமிழ் சகோதர சகோதரிகளுக்கு, எனது வார்த்தைகளை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது கருத்துக்கள் சிலருக்கு வலியை ஏற்படுத்தியதை நான் உணர்கிறேன். அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன். இதனால் பாதிக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த எவருக்கும், என் இதயத்தின் ஆழத்தில் இருந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். மேலும், எனது முந்தைய கருத்துக்களைத் திரும்பப் பெறுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Readmore: சிக்கிய பாஜக அமைச்சர்…! தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற எடப்பாடி…!

Tags :
தமிழர்களை தொடர்புபடுத்தி பேசிய விவகாரம்பகிரங்க மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர்பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்புஷோபா கரந்த்லாஜே
Advertisement
Next Article