For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சூப்பர் வாய்ப்பு...! SSC காலி பணியிடங்கள் அறிவிப்பு...! 10,12-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்...!

06:58 AM Apr 11, 2024 IST | Vignesh
சூப்பர் வாய்ப்பு     ssc காலி பணியிடங்கள் அறிவிப்பு     10 12 ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்
Advertisement

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் 2024"-க்கான காலி பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்களில் எழுத்தர், இளநிலை செயலக உதவியாளர் போன்ற 'சி' பிரிவு பணிகளுக்கான போட்டித் தேர்வை பணியாளர் தேர்வாணயம் நடத்துகிறது. இதற்கு நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisement

பணியின் பெயர், வயது வரம்பு, கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வு முறை, எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. தேர்வாணையத்தின் இணையதளமான ssc.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 07.05.2024 ஆகும். இணைய தளத்தில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி 08.05.2024 ஆகும்.

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு 2024 ஜூன்-ஜூலை மாதங்களில் 21 மையங்கள் / நகரங்களில் நடைபெறும்‌. ஆந்திராவில் 10 மையங்கள்; புதுச்சேரியில் ஒரு மையம், தமிழ்நாட்டில் 07 மையங்கள்; தெலுங்கானாவில் 03 மையங்களில் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement