மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர்..!
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன்.
கோவை கொடிசியா வளாகத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், Bunக்கு ஜிஎஸ்டி இல்ல. அதுக்குள்ள வைக்குற கிரீமுக்கு 18% சதவீத ஜிஎஸ்டி.. கடைய நடத்த முடியல மேடம் என அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார். ஸ்வீட், கார வகை உணவுப்பண்டங்களுக்கு ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வேண்டும் எனவும் கொங்கு மண்ணிற்கே சொந்தமான நகைச்சுவை பாணியில் சீனிவாசன் வலியுறுத்தினார்.
ஒரே குடும்பத்திற்கு அளிக்கும் பில்லில் எவ்வாறு மாறி மாறி ஜிஎஸ்டி விதிப்பது என்றும், அவர்கள் தங்களிடம் சண்டைக்கு வருவதாகவும் உணவக உரிமையாளர் கூறினார். கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் வாடிக்கையாளர் என்றும், ஜிஎஸ்டி குறித்து அவரிடம் கேட்டால், வட இந்தியர்கள் ஸ்வீட் வகைகளை அதிகம் சாப்பிடுவதால் அதற்கு ஜிஎஸ்டி குறைவு. எனவே அனைத்து பொருள்களுக்கும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி வேலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர். கோவையில் நடந்த தொழில்துறை கலந்தாய்வு கூட்டத்தில் இனிப்புக்கு 5 சதவீதம், காரத்திற்கு 12 சதவீதம் வரிவிதிப்பு என பேசிய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன். அவிநாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மத்திய அமைச்சரை சந்தித்து, தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டதாக சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார்.