நடுரோட்டில் பைக்கில் டைட்டானிக் போஸ் கொடுத்த 'ஸ்பைடர்மேன்' 'ஸ்பைடர் வுமன்'…! தட்டி தூக்கிய டெல்லி போலீஸ்..! என்ன நடந்தது…
ரீல்ஸ் மோகம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரீலிஸ் எடுப்பதற்காக புதுபுது முயற்சிகள் எடுக்கும் நபர்கள் இறுதியில் வில்லங்கத்தில் சிக்கிக்கொள்கின்றனர். அதுபோல் தான் தற்போது டெல்லியில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
தென்மேற்கு டெல்லியின் துவாரகாவில் சூப்பர் ஹீரோக்கள் ஸ்பைடர்மேன் மற்றும் ஸ்பைடர் வுமன் போல உடையணிந்து மோட்டார் சைக்கிளில் டைட்டானிக் போஸ் கொடுத்து வித்தை காட்டி, ரீல்ஸ் எடுத்தது ஒரு ஜோடி. ரீல்ஸ் மூலம் பிரபலமான டெல்லியை சேர்ந்த ஆதித்யா என்பவரும் அவரது நண்பர் அஞ்சலியும் ஸ்பைடர்மேன்' மற்றும் 'ஸ்பைடர் வுமன்' போல் உடை அணிந்து சாலையில் பைக்கில் சவாரி செய்வதை இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பதிவு செய்தனர்.
அந்த ரீல்ஸில் "மெட்ரோ நிலையத்தில் இருந்து வந்த ஸ்பைடர் வுமன் பைக்கில் சாலையில் நின்று கொண்டிருந்த ஸ்பைடர்மேன் நண்பரை சந்தித்து கைகுலுக்குக்கின்றார். பின்னர் இருவரும் பைக்கில் தெருக்களில் வளம் வருகின்றனர் அப்போது இருவரும் கைகளை தூக்கி டைட்டானிக் படத்தில் வருவது போல் போஸ் கொக்கிடுகின்றனர். இந்த வீடியோவுக்கு "ஸ்பைடர்மேன் நஜாப்கர் பகுதி 5" என்று தலைப்பிடப்பட்டு இன்ஸ்டகிராமில் பதிவிடப்பட்டது.
அவர்களின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, இரண்டு பேரையும் டெல்லி டிராஃபிக் போலீஸார் இன்று கைது செய்தனர். ஹெல்மெட் அணியாமல் நடுரோட்டில் வித்தைக்காட்டி, கண்ணாடி மற்றும் நம்பர் பிளேட் இல்லாத பைக்கில் பயணம் செய்து போக்குவரத்து விதிகளை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸ்பைடர்மேன் போல உடையணியும் 20 வயதான இவர், இந்தியன் ஸ்பைடி அஃபிஷியல் என்ற இன்ஸ்டாகிராம் கணக்கையும் நடத்தி வருகிறார், பொதுவில் இதுபோன்ற ஸ்டன்ட் செய்வது முதல்முறை கிடையாது.