For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அதிர்ச்சி வீடியோ!! பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த நபர்?

06:25 AM May 20, 2024 IST | Baskar
அதிர்ச்சி வீடியோ   பாஜகவுக்கு ஒரே நேரத்தில் 8 முறை வாக்களித்த நபர்
Advertisement

உத்தர பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில் இளைஞர் ஒருவர் மொத்தம் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

மொத்தம் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், இன்னும் 3 கட்ட தேர்தல் நடக்க உள்ளது.இதன் காரணமாக நாடு முழுக்க பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் நடந்த தேர்தல் முறைகேடு சம்பவம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

அந்த வீடியோவில் இளைஞர் ஒருவரே பல முறை பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். அந்த வீடியோவை அவரே எடுத்துள்ள நிலையில், இது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. மொத்தம் 8 முறை அந்த நபர் பாஜகவுக்கு வாக்களித்தாக தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், பலரும் இதுபோன்ற தேர்தல் முறைகேட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சாடி வருகின்றனர். ஃபரூகாபாத் மக்களவை தொகுதியில் கடந்த மே 13ஆம் தேதி மக்களவை தேர்தல் நடந்த நிலையில், அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வருகிறார்கள்.

மேலும், காங்கிரஸ் கட்சி இந்த வீடியோவை தங்கள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது. தேர்தல் ஆணையமே, இந்த நபர் மொத்தம் 8 முறை பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். இப்போதாவது விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுங்கள்" என்று பதிவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தின் சமாஜ்வாதி தலைவரும் இந்தியா கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவருமான அகிலேஷ் யாதவும் இந்த வீடியோவை தனது எக்ஸ் பகிர்ந்துள்ளார். அவர் தனது பதிவில், "இது தவறு என்று தேர்தல் ஆணையம் கருதினால், நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில்… பாஜகவின் பூத் கமிட்டி உண்மையில் லூட் (கொள்ளை) கமிட்டி போலத் தான் நடந்து கொள்ளும்" என்று பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உத்தர பிரதேச தேர்தல் ஆணையர், "இணையத்தில் பரவி வரும் இந்த வீடியோ எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. இந்த விவகாரம் குறித்துச் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Read More: ‘என் உதடு என் இஷ்டம்’ – உதட்டு சர்ச்சைக்கு பதிலடி கொடுத்த நடிகை!

Advertisement