For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அழிவின் அபாயத்தில் உயரினங்கள்!… நகர தொடங்கிய உலகின் மிகப்பெரிய பனிப்பாறை!… விஞ்ஞானிகள் அதிர்ச்சி!

06:45 AM Nov 27, 2023 IST | 1newsnationuser3
அழிவின் அபாயத்தில் உயரினங்கள் … நகர தொடங்கிய உலகின் மிகப்பெரிய பனிப்பாறை … விஞ்ஞானிகள் அதிர்ச்சி
Advertisement

அண்டார்டிகாவில் உள்ள உலகின் மிகப்பெரிய பணிப்பாறை சிறிது சிறிதாக நகர்ந்து வருவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர்.

Advertisement

அண்டார்டிகாவில் சுமார் 4,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள A23-a என்று அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை நியூயார்க் நகரத்தை விட 3 மடங்கு பெரியதாகும். இந்த அளவுக்கு பெரிய அளவிலான பனிப்பாறை நகர்தலை பார்ப்பது அரிது என்று தெரிவித்துள்ள பிரிட்டனை சேர்ந்த அன்டார்டிக் பனிப்பாறை நிபுணர் டாக்டர்.ஆலிவர்மார்ஷ், விஞ்ஞானிகள் ராட்சத பனிப்பாறையை துல்லியமாக கண்காணித்து வருவதாக கூறியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய அளவில் உள்ள இந்த பனிப்பாறையை நகர்த்தும்போது, அதனை பார்ப்பது அரிது. தற்போதைய நிலையில் A23-a பனிப்பாறை மெதுவாக தெற்கு பெருங்கடலை நோக்கி நகர்வது கண்டறியப்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.இந்த ராட்சத பாறை சற்று ஆவியாகி உள்ளததால், எடை குறைந்து காற்று மற்றும் கடல் நீரோட்டம் குறைந்து அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு நோக்கி நகர்கிறது. A23a பாறை தெற்கு ஜார்ஜியா தீவினை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த தீவினை இந்த பனிப்பாறை சென்றால்,, அண்டார்டிகாவின் வனவிலங்குகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். பல்லாயிரம் உயிரினங்கள், பென்குயின்கள் மற்றும் கடற்பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்றார்.

Tags :
Advertisement