பாம்பை விட அதிக விஷம் கொண்ட மரம்.. மறந்தும் கூட இந்த மரத்தின் கீழ் நின்று விடாதீர்கள்..
பொதுவாக விஷம் என்றால் நமது நினைவிற்கு வருவது பாம்புகள் தான். பாம்பின் விஷம் மனிதரை கொன்று விடும். அதனால் தான், பாம்பின் மீது அனைவருக்கும் பெரிய பயம் இருக்கும். ஆனால் பாம்புகளை விட ஒரு சில மரங்களுக்கு விஷம் அதிகம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?? ஆனால் அது உண்மை தான். பாம்பை விட மிக கொடிய விஷத்தை கொண்ட மரம் தான் மஞ்சினீல் மரம் (Manchineel Tree). இந்த மரம் பொதுவாக தென் அமெரிக்கக் கண்டத்தின் வடக்கே, கரீபியன் தீவுகள் மற்றும் புளோரிடாவில் காணப்படுகிறது. இந்த மரத்தில் உள்ள பழங்கள் பார்ப்பதற்கு ஆப்பிள் போலவே இருக்கும். ஆப்பிள் போல இருப்பதால் நாம் இதை சாப்பிடலாம் என்று தவறுதலாக சாப்பிட்டு விட்டால், மிகக் கொடுமையான ஆபத்தை ஏற்படுத்தி விடும்.
ஏனென்றால், இந்த மரத்தில் உள்ள பழத்தில் இருந்து சுரக்கும் திரவம் மனித உடலில் கடுமையான விஷத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த மரங்கள் மீது எச்சரிக்கை லேபிள்கள் ஒட்டப்படும். இந்த பழத்தை சாப்பிடுவதால் மட்டும் இல்லாமல், இந்த மரத்தின் கீழ் நிற்பது கூட பெரிய ஆபத்துக்களை ஏற்படுத்தும். ஆம்,
இந்த மரத்தின் அனைத்து பகுதிகளிலும் வலுவான நச்சுகள் உள்ளதால், இது அதிகப்படியான தோல் அழற்சியை ஏற்படுத்தும். மேலும், இந்த மரத்தில் உள்ள திரவம் நம் மீது பட்டால், தொண்டை, வாயில் அசௌகரியம், தோல் எரிச்சல்கள் மற்றும் ஒவ்வாமை ஆகியவை ஏற்படுத்தி விடும். இதனால், மழைக் காலங்களில் இந்த மரத்தின் கீழ் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது வயிற்றுக்குள் சென்றால், மரணம் ஏற்படும்.
Read more: ஒல்லியாக இருக்கும் உங்கள் குழந்தை புசுபுசுன்னு மாறனுமா??? அப்போ இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!