For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

திமுகவின் தடையை மீறி கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம்..!! உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை..!! அண்ணாமலை அதிரடி..!!

02:59 PM Jan 21, 2024 IST | 1newsnationuser6
திமுகவின் தடையை மீறி கோயில்களில் சிறப்பு பூஜை  அன்னதானம்     உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை     அண்ணாமலை அதிரடி
Advertisement

ஆலய நடைமுறைகளில் தலையிட திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

Advertisement

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நாளைய தினம் அயோத்தியில் ராமர் சிலை, பிரதமர் மோடியால் பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. சாதி மத வேறுபாடின்றி, மக்கள் அனைவரும் இந்த புண்ணிய தினத்தை வரவேற்கின்றனர். இதனை முன்னிட்டு முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் சிறப்புப் பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மதச்சார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில் இந்துமத விரோதச் செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, தமிழக ஆலயங்களில் சிறப்புப் பூஜைகளுக்கும், அன்னதானத்துக்கும் தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது. ஆலய நடைமுறைகளில் தலையிட அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? மேலும், ராமர் சிலை நிறுவப்படுவதை முன்னிட்டு, தமிழக கோயில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக கோயில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை. ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ திமுக அரசுக்கு எந்த உரிமையுமில்லை. இந்து மத மக்களின் அடிப்படை உரிமையான ஆலய வழிபாட்டைத் தடுப்பதை, மாற்று மத மக்களே விரும்ப மாட்டார்கள். யாரை திருப்திப்படுத்த இந்த பிரிவினை முயற்சியில் ஈடுபடுகிறது திமுக அரசு? மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப் பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை திமுக கைவிட வேண்டும். திமுகவின் தடையை மீறி, அயோத்தி ராமர் கோயில் விழாவுக்காக, தமிழகக் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும்” என்று பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement