For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 10-ம் தேதி சிறப்பு குறைதீர்க்கும் முகாம்...!

Special grievance redressal camp for differently abled persons on 10th
08:30 AM Oct 08, 2024 IST | Vignesh
மாற்றுத்திறனாளிகளுக்கு வரும் 10 ம் தேதி சிறப்பு குறைதீர்க்கும் முகாம்
Advertisement

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 10.10.2024 அன்று நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது; ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறும் நாளன்று மாற்றுத்திறனாளிகளுக்கு எவ்வித சிரமமும் இல்லாத வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Advertisement

மேலும், மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சேலம் மாவட்ட ஆட்சியரகத்திலும், ஒவ்வொரு மாதமும் இக்கூட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 10.10.2024 வியாழக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அறை எண்:12-இல் நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement