ஒரு நடிகையை பிடிக்க இவ்வளவு அவசரம் ஏன்..? எங்க பொதுச்செயலாளர் அப்படி சொன்னாரா..? செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி..!!
மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் அதிமுக எம்ஜிஆர் மன்றம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ”திமுகவினர் பேசாத பேச்சையா நடிகை கஸ்தூரி பேசிவிட்டார்..? அவரை இரண்டு தனிப்படைகள் அமைத்து பிடித்துள்ளன. ஒரு நடிகையை பிடிக்க இவ்வளவு அவரசம் ஏன்..? நான் கஸ்தூரிக்கு ஆதரவாக பேசவில்லை. பொதுவாக பேசுகிறேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம், ‘‘அதிமுகவுடன் தவெக கூட்டணி இல்லையென்று சொல்லிவிட்டார்களே என்ற கேள்விக்கு, ‘‘எடப்பாடி பழனிசாமி கூட்டணின்னு சொன்னாரா? சமூக வலைத்தளங்களில் ஆயிரம் பேசுவாங்க. எங்க பொதுச்செயலாளர் சொன்னாரா? இல்லை விஜய் சொன்னாரா?. நீங்கதான் கேள்வி கேட்டீங்க. இந்த இரண்டுக்கும் பதில் சொல்லுங்க. நான் பலமுறை ஊடகங்களை சந்திக்கும்போது சொல்லியிருக்கிறேன்.
நடிகர் விஜய் கட்சி ஆரம்பிப்பதில் மகிழ்ச்சி என்று நான் பலமுறை கூறியுள்ளேன். ஆயிரம் பேர் பேசுவாங்க. அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? என்றார். அதைத்தொடர்ந்து திண்டுக்கல் சீனிவாசன், கூட்டணிக்கு வருபவர்கள் சீட்டும், பணமும் கேட்பதாக பேசியுள்ளாரே?’’ என்று கேட்டதற்கு, ‘‘செயல்வீரர்கள் கூட்டத்தில் ஆயிரம் பேசுவாங்க. நாம் வலுவாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் அவர் அப்படி சொல்லியிருக்கிறார்” என்று கூறி சமாளித்தார்.
Read More : செம அறிவிப்பு..!! 450 + காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க 30ஆம் தேதியே கடைசி..!! லட்சத்தில் சம்பளம்..?