கோடையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்..!! பள்ளிகள் மீது பாயும் கடும் நடவடிக்கை..!!
கோடை விடுமுறை என்பது கல்விச் சூழலில் இருந்து மாணவர்களும், ஆசிரியர்களும் விடுபட்டு ஓய்வு பெறுவதற்கும், வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்கும் தான். தற்போதைய வெப்பநிலையை கவனித்தால் சாதாரணமாக 100 டிகிரிக்கு மேல் தான் பதிவாகி வருகிறது. மேலும், இன்று முதல் அக்னி நட்சத்திரமும் தொடங்கியிருக்கிறது. வெப்ப அலையை தாங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், சில தனியார் பள்ளிகள், 10, 12ஆம் வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிட்டுள்ளன. சர்ச்சையாகி விடக் கூடாது என்பதற்காக, சீருடை இல்லாமல் மாற்று உடையில் மாணவர்களை பள்ளிக்கு வர அறிவுறுத்துகின்றனர். இதை சில பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டாலும், பலர் புகார் அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், கடுமையான வெப்பம் வீசக்கூடிய நிலையில், சிறப்பு வகுப்புகளை நடத்தக் கூடாது என்றும் அரசு உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசின் உத்தரவை மீறி பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாக புகார் எழுந்த நிலையில், மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த விவகாரத்தில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Read More : ஹேக்கர்களிடம் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்..!! இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க..!!