For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வார விடுமுறை... இன்று முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்...! அரசு அறிவிப்பு

Special buses are operating from Chennai from today to the 5th in view of the weekend holidays.
06:10 AM Jan 03, 2025 IST | Vignesh
வார விடுமுறை    இன்று முதல் சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள்     அரசு அறிவிப்பு
Advertisement

இன்று முதல் 5-ம் தேதி வரை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

இன்று முதல் 5-ம் தேதி வரை வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும், இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 245 பேருந்துகளும், நாளை 240 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று மற்றும் நாளை மொத்தம் 51 பேருந்துகளும், மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்திலிருந்து இன்று மற்றும் நாளை மொத்தம் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 6,892 பயணிகளும் சனிக்கிழமை 6,389 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 10,966 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement