தூள்...! மகளிர் உரிமைத் தொகை... புதிய பயனர்களுக்கு சூப்பர் ஏற்பாடு...! முழு விவரம்
குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.7 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமன்றி மேலும் 11.8 லட்சம் பேர் இந்த திட்டத்தில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
மகளிர் உரிமைத் தொகையின் 10-வது தவணை ரூ.1000, இம்மாதம் வரவு வைக்கப்பட உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி இந்த முறை கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கூடுதலாக 1.30 லட்சம் பேர் இணைக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி முன்னாள் அரசு ஊழியர்களின் மனைவிகளுக்கு, முன்னாள் கார்ப்பரேஷன் ஊழியர்களின் மனைவிகளுக்கு, புதிதாக ரேஷன் கார்டு பெற்றவர்களுக்கு, புதிதாக திருமணம் ஆன பெண்களுக்கு பணம் வழங்கப்படலாம்.
அதேபோல முன்னாள் மாநகராட்சி ஊழியர்களின் மனைவிகளுக்கும் உரிமைத் தொகை வழங்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த மாதம் வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிப்படி, தமிழகத்தில் 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மாதம் தோறும் 15-ம் தேதி ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ரேஷன் அட்டை பெற்றவர்களும் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
விரிவாக்கம் செய்யப்படும் விண்ணப்பங்கள் இந்த வாரத்தில் ஏற்கப்படும். அவர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு ஜூலை 12-ம் தேதிக்குள் புதிய பயனாளிகள் பெயர்கள் சேர்க்கப்படும். ஜூலை 14ம் தேதி 1 ரூபாய் அனுப்பி வங்கி கணக்கில் சோதனை செய்யப்படும். ஜூலை 15ம் தேதி கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள். அதேபோல் ஆகஸ்ட் மாதமும் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்படுவார்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்தான் இந்த திட்டத்தில் மீண்டும் சேர 11.8 லட்சம் பேர் மறு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். அக்டோபர் இறுதிவரை இவர்கள் கொடுத்தனர். இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது.
சிறப்பு ஏற்பாடு
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. மக்கள் எளிதாக இணையும் வகையில் சிறப்பு கேம்ப் மற்றும் இ-சேவை முகாம்களை அமைக்க முடிவு செய்துள்ளனர். கூடுதலாக இ-சேவை மையங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.