For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா...! விண்வெளித் துறைக்கு ரூ. 1,000 கோடி... மத்திய அமைச்சரவை ஒப்புதல்...!

Space Department Rs. 1,000 crore... Union Cabinet approval
06:08 AM Oct 25, 2024 IST | Vignesh
அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா     விண்வெளித் துறைக்கு ரூ  1 000 கோடி    மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Advertisement

இன்-ஸ்பேஸ் திட்டத்தின் கீழ் விண்வெளித் துறைக்கு ரூ. 1,000 கோடி தனியார் கூட்டு மூலதனத்தை நிறுவ மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்-ஸ்பேஸ் நிறுவனத்தின் கீழ் விண்வெளித் துறைக்கு ரூ. 1,000 கோடி தனியார் கூட்டு மூலதனத்தை நிறுவ ஒப்புதல் அளித்துள்ளது. ரூ. 1,000 கோடி உத்தேச தனியார் கூட்டு மூலதனத்திற்கான இந்த நிதியத்தின் செயல்பாட்டுக் கால அளவு செயல்பாடு தொடங்கிய தேதியிலிருந்து ஐந்தாண்டுகள் ஆகும். முதலீட்டு வாய்ப்புகளையும் நிதித் தேவையையும் பொறுத்து நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ரூ. 150 முதல் 250 கோடி வரை இருக்கும்.

2025-26 ரூ. 150 கோடி, 2026-27 ரூ. 250 கோடி, 2027-28 ரூ. 250 கோடி, 2028-29 ரூ. 250 கோடி, 2029-30 ரூ. 100 கோடி ஆகும். நிறுவனத்தின் வளர்ச்சிப் பாதை, தேசிய விண்வெளித்திறன்கள் மீதான அதன் ஆற்றல் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் உத்தேச முதலீடு ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 60 கோடி வரை இருக்கும். முதலீட்டு சமபங்கு விகிதம் வளர்ச்சி நிலையில் ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 30 கோடி வரை, பிந்தைய வளர்ச்சி நிலையில் ரூ. 10 கோடியிலிருந்து ரூ. 30 கோடி வரை என இருக்கும்.

இந்த நிதி இந்தியாவின் விண்வெளித் துறையை முன்னேற்றுவதற்கும், தேசிய முன்னுரிமைகளுடன் இணைந்து, பின்வரும் முக்கிய முயற்சிகள் மூலம் புதிய கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேபடுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement