முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை..!! இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை..!!

07:10 AM May 16, 2024 IST | Chella
Advertisement

தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே, கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அவசரக் கடிதம் அனுப்பியுள்ளது.

Advertisement

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளில், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை,தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று, நாளை குமரி, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்டங்களிலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கனமழையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டுமென 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில், நெல்லை மாவட்டத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும், 18 மற்றும் 19ஆம் தேதிகளில் மிக கனமழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும், மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், தென்மேற்கு பருவமழை வரும் மே 31 ஆம் தேதி கேரளாவில் தொடங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள், அந்தமான் நிகோபார் தீவுகளில் மே 19 ஆம் தேதி முன்கூட்டியே தென் மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில், கேரளாவில் 31ஆம் தேதி தொடங்குகிறது.

Read More : இஎம்ஐ-இல் பொருட்கள் வாங்கும் முன் இதை மறந்துறாதீங்க..!! சிக்கல் உங்களுக்கு தான்..!!

Advertisement
Next Article