பெற்ற தாயை பலாத்காரம் செய்ய முயற்சி..!! மறுத்ததால் கொடூரமாக கொன்ற மகன்..!!
கர்நாடக மாநிலம் தக்ஷணா கன்னடா மாவட்டம் கொண்டேலா கிராமத்தில் வசித்து வந்தவர் மூதாட்டி ரத்னம் ஷெட்டி (வயது 62). இவரது மகன் ரவிராஜ் செட்டி. கடந்த அக்.26ஆம் தேதி முதல் இவர்களின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லை. நேற்று வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றமும் வீசியுள்ளது. இதையடுத்து, சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், அங்கு வந்த போலீசார், வீட்டில் சோதனை செய்தபோது, 62 வயது மூதாட்டி சடலமாக கிடந்தார். அவரின் மகன் ரவிராஜ் ஷெட்டி மாயமான நிலையில், அவரை போலீசார், தேடியபோது தாயை கொலை செய்து தலைமறைவான விவகாரம் தெரியவந்தது.
இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ரவிராஜை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அக்.26ஆம் தேதி சம்பவத்தன்று ரவிராஜ் தனது தாயை பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். அதற்கு தாய் உடன்பட மறுக்கவே, ஆத்திரத்தில் தாயை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.