For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சார்ஜ் 10% குறைவாக செல்லும்போது, போன் அதிக அளவு சூடாகும்..! மொபைல் போன் அடிக்கடி யூஸ் பண்ணுபவரா நீங்கள்.! இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்.!

06:09 AM Nov 16, 2023 IST | 1Newsnation_Admin
சார்ஜ் 10  குறைவாக செல்லும்போது  போன் அதிக அளவு சூடாகும்    மொபைல் போன் அடிக்கடி யூஸ் பண்ணுபவரா நீங்கள்   இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்
Advertisement

மொபைல் போன் இன்று அனைவரது வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கம் ஆகிவிட்டது. அதிலும் ஸ்மார்ட்போன்களின் வருகைக்குப் பிறகு இன்றியமையாத சில பணிகளை செல்போன்கள் எளிமையாக்கி தருகிறது. இந்த செல்போன் நமக்கு பொழுதுபோக்கு மற்றும் அன்றாட பணிகளை எளிமையாக்கி தந்தாலும் இதில் உடலுக்கு தீமை ஏற்படுத்தக்கூடிய அனேக விஷயங்கள் இருக்கின்றன. எனவே செல்போனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Advertisement

செல்போன்கள் சார்ஜ் ஆகி கொண்டிருக்கும்போது செல்போன்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இவற்றால் மின்சாரம் சார்ந்த விபத்துக்கள் நடைபெறுவதும் தவிர்க்கப்படுகிறது. மேலும் செல்போன் சார்ஜரில் இருக்கும் போது அதிக அளவு வெப்பத்தை வெளியிடும். இது நமக்கு பல்வேறு விதமான நோய்களை ஏற்படுத்தும். இதனால் செல்போன் சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகள் வந்தாலும் மின்சார இணைப்பை துண்டித்து விட்டு தான் பயன்படுத்த வேண்டும்.

செல்போனில் சார்ஜ் கடைசி புள்ளியில் இருக்கும் போது பேசுவதையோ அல்லது பயன்படுத்துவதையோ தவிர்ப்பது நலம். ஏனென்றால் செல்போனின் சார்ஜ் 10% குறைவாக செல்லும்போது மொபைல் போன் அதிக அளவு சூடாகும். மேலும் அதிலிருந்து அதிகப்படியான கதிர்வீச்சுகள் வெளிப்படும். இவற்றைத் தவிர்ப்பதற்காக செல்போனின் சார்ஜ் குறைந்த அளவில் இருக்கும்போது அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். மேலும் இது செல்போனில் பேட்டரி விரைவாக பாதிக்கப்படுவதில் இருந்தும் தடுக்க முடியும்.

அதிகப்படியாக செல்போனில் பேசிக் கொண்டே இருப்பது நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய ஒரு செயலாகும். எனவே தேவைக்கேற்ப பயன்படுத்தி நமது உடல் நலனையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இன்றைய ஸ்மார்ட் ஃபோன்களில் கதிரியக்கத்தை குறைப்பதற்கு என செயலிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தி செல்போனிலிருந்து வெளிப்படும் அதிகப்படியான கதிர்வீச்சுகளை தவிர்த்துக் கொள்ளலாம். மொபைல் போன் சைலன்ட் மோடு மற்றும் வைப்ரேஷனில் இருக்கும்போது அதிகப்படியான ரேடியேஷன் இருக்கும். எனவே ரிங்டோன் மோடில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

Tags :
Advertisement