For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உங்கள் வீட்டு பூஜை அறையில் இதெல்லாம் இருக்கா..? செல்வ செழிப்போடு இருக்க இப்படி பண்ணுங்க..!!

Placing certain items in the pooja room can bring positive thoughts.
05:30 AM Nov 26, 2024 IST | Chella
உங்கள் வீட்டு பூஜை அறையில் இதெல்லாம் இருக்கா    செல்வ செழிப்போடு இருக்க இப்படி பண்ணுங்க
Advertisement

நம் வாழ்வில் வெற்றி பெறக் கடின உழைப்பு, நம்பிக்கை, விடாமுயற்சி எவ்வளவு முக்கியமோ அந்தளவுக்கு கடவுளின் அருளும் முக்கியம் வாய்ந்தது. இந்துமத கலாச்சாரத்தில் பூஜையறை என்பது ஆன்மீக முக்கியத்தை கொண்டாடும் இடமாகக் கருதப்படுகிறது. அப்படி பூஜை அறையின் ஆன்மீக ஆற்றலை அதிகரிக்கவும், வெற்றி மற்றும் செல்வச் செழிப்பை அடையவும் சில விஷயங்களை நாம் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

Advertisement

பூஜை அறையில் காலையிலும், மாலையிலும் தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. குறிப்பாகப் பூஜையறையில் விளக்கேற்று நடத்துவதும் முக்கியமானது ஊதுபத்திகள். பூஜை அறையில் ஏற்றப்படும் ஊதுபத்திகள் மனதைத் தூய்மைப்படுத்தும். பிரார்த்தனை, தியானம் போன்ற சூழ்நிலைகளில் மனதை ஒருநிலைப்படுத்த உதவும்.

மேலும், பூஜையின்போது மணியோசை எழுப்புவது மிகவும் முக்கியமான ஒன்று. இதைப் பூஜையறையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதில் இருந்து ஏற்படும் அதிர்வு நம்மிடம் இருக்கும் எதிர்மறை சக்திகளை விரட்டி, ஆன்மீக ரீதியில் செழுமைப்படுத்தும். அதேபோல், பூஜையறையில் புனிதமான நதியின் நீரோ அல்லது நன்னீரோ வைத்திருப்பது நல்லது.

இந்த புனித நீர் பூஜையறையை சுத்திகரித்து, பாதுகாப்பை மேம்படுத்துவதாக நம்பப்படுகிறது. மேலும், பூஜையறையில் வைக்கப்படும் நீரில் துளசி சேர்த்து சில துளிகளை நாள்தோறும் பூஜை அறை மற்றும் வீடு முழுவதும் தெளிப்பது நல்லது.

Read More : குழந்தைகளுக்கு அடிக்கடி இருமல் வருகிறதா..? இதை சாதாரணமா எடுத்துக்காதீங்க..!! நுரையீரல் தொற்று ஏற்படும் அபாயம்..!!

Tags :
Advertisement