முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பள்ளி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்... இத்தனை நாட்கள் கோடை விடுமுறையா?

01:23 PM Apr 21, 2024 IST | Mari Thangam
Advertisement

தமிழகத்தில் பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட இருக்கும் நிலையில், கொளுத்தி வரும் வெயிலின் தாக்கம் மற்றும் வாக்கு எண்ணிக்கை உள்ளிட்டவை இருப்பதால் மேலும் ஒரு வாரம் விடுமுறை நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement

தமிழ்நாட்டில் வழக்கமாக பள்ளிகளுக்கான கோடை விடுமுறை மே மாதம் 1 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை விடப்படும். இந்த ஆண்டு மக்களவை பொதுத் தேர்தல் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை விடுமுறை இல்லா தினங்களில் பள்ளிக்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணி மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே வரும் நான்காம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதால் அந்த பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். இதன் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் ஜீன் நான்காம் தேதி வரை விடுமுறை என்பது உறுதியாகியுள்ளது. அதேவேளையில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வருவதால் ஜூன் 2 வது வாரம் வரை பள்ளிகளுக்கான கோடை விடுறை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
school holidaysummer
Advertisement
Next Article