”அப்படினா இதெல்லாம் நடிப்பா கோபால்”..? வலிப்பு ஏற்பட்டதாக நாடகமாடிய ஞானசேகரன்..!! மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி..!!
அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன், வலிப்பு ஏற்பட்டதாக நாடகமாடியது அம்பலமானது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு மட்டுமே இவ்வழக்கில் தொடர்பு உள்ளது என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்தது. ஆனால், வழக்கின் பின்னணியில் முக்கியப் பிரமுகர்கள் சிலரும் உள்ளதாகவும், அவர்களை காப்பாற்ற அரசும், காவல்துறையும் முயற்சிப்பதாக அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டின.
இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் புக்யா சினேஹா பிரியா, அய்மன் ஜமால், பிருந்தா ஆகியோர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் குற்றச்சாட்டுக்கு உள்ளான ஞானசேகரனின் வீட்டில் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
மேலும், கைது செய்யப்பட்டிருந்த ஞானசேகரனிடமும் விசாரணை நடத்தினர். அதேபோல், அவரிடமிருந்து ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை சைபர் க்ரைம் காவல்துறை வழங்கி அதில் சேமித்து வைத்திருந்த வீடியோக்களையும் கைப்பற்றினர். கடந்த வாரம் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, விசாரணையின்போது ஞானசேகரனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை உடனடியாக சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தலையில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரியவந்தது.
இதனால் அவர் வலிப்பு ஏற்பட்டதாக அவர் நாடகமாடியதும் அம்பலமானது. இதனையடுத்து, உடனடியாக அவர் மருத்துவமனையில் இருந்து எழும்பூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர், காவலில் வைக்கப்பட்ட அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Read More : தமிழகத்தை உலுக்கிய சம்பவம்..!! முடித்து வைக்கப்போகும் விஜய்..!! அடுத்த ஸ்கெட்ச் இங்க தான் பாஸ்..!!