தமிழகத்தை உலுக்கிய சம்பவம்..!! முடித்து வைக்கப்போகும் விஜய்..!! அடுத்த ஸ்கெட்ச் இங்க தான் பாஸ்..!!
பரந்தூர் விமான நிலைய திட்டத்தை எதிர்த்து போராடி வரும் மக்களை தவெக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக, வேங்கைவயலை தேர்வு செய்திருக்கிறார். பல அரசியல் தலைவர்கள் வேங்கைவயல் சம்பவம் குறித்து பேசி வந்தாலும், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், தன்னுடைய அடுத்த பயணம் வேங்கைவயல் என்றும் அதற்கான ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் செய்யுமாறும் உத்தரவு போட்டுள்ளாராம் விஜய். இதனால், மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது, மக்களை சந்திக்கும் இடத்தை தேர்வு செய்வது என தவெக அரசியல் சூடுபிடித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் புதுக்கோட்டை மாவட்ட எஸ்பியிடம் விஜய் வேங்கைவயல் செல்ல அனுமதி கோரி கடிதம் வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பரந்தூரில் பேசிய விஜய், ஆளும் கட்சியான திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். விமான நிலைய திட்டத்தில் திமுக அரசுக்கு ஏதோ லாபம் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். மேலும், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் கிடையாது. விமான நிலையம் வரக் கூடாது என நான் சொல்லவில்லை. பரந்தூரில் அமைக்கக் கூடாது என்றுதான் நான் வலியுறுத்துகிறேன். நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது 8 வழிச்சாலையை எதிர்த்தீர்கள். அந்த நிலைப்பாட்டைதானே இங்கும் எடுத்திருக்க வேண்டும். அது எப்படி எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளும் கட்சியானால் எதிர்ப்பா? என கடுமையாக விமர்சித்திருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், வேங்கைவயலில் தவெக தலைவர் விஜய் என்ன பேசப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.
Read More : பதவிக்கு ரூ.15,000 லட்சமா..? இன்று தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!! நேரடியாக விசாரணை நடத்தும் விஜய்..!!