For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

உலகின் மிகச்சிறிய மருத்துவமனை, அயோத்தியில் அறிமுகம்!... வெறும் 8 நிமிடத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆபரேஷன்!… மத்திய அரசின் ஏற்பாடு!

04:21 PM Jan 20, 2024 IST | 1newsnationuser3
உலகின் மிகச்சிறிய மருத்துவமனை  அயோத்தியில் அறிமுகம்     வெறும் 8 நிமிடத்தில் எங்கு வேண்டுமானாலும் ஆபரேஷன் … மத்திய அரசின் ஏற்பாடு
Advertisement

நாளை மறுநாள் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு, அயோத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களின் கூட்டம் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, மத்திய சுகாதார அமைச்சகம் உலகின் முதல் சிறிய மருத்துவமனையை அயோத்திக்கு அனுப்பியுள்ளது. முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த மருத்துவமனை, மத்திய அரசின் பீஷ்மா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு ஆரோக்ய மைத்ரி கியூப் என்று பெயரிடப்பட்டுள்ளது.

Advertisement

உலகின் மிகச்சிறிய மருத்துவமனை இது என்றும், இதன் மூலம் உலகில் எங்கும் ஆபரேஷன் தியேட்டரை வெறும் 8 நிமிடங்களில் தயார் செய்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தொடங்கலாம் என்பதும் இதன் சிறப்பு ஆகும். முழு மருத்துவமனையையும் ஒரு மணி நேரத்தில் கட்டிவிடலாம். இந்த மருத்துவமனையை விமானத்தில் ஏற்றி எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இந்த கையடக்க மருத்துவமனைகள் அயோத்தியில் இரண்டு இடங்களில் கட்டப்படும். எனவே தேவைப்படும் சூழ்நிலையில், விபத்து ஏற்பட்டாலும், உடனடியாக சிகிச்சையைத் தொடங்கலாம்.

ஆரோக்ய மைத்ரி போர்ட்டபிள் ஹாஸ்பிட்டலை ஒரு சில சிறிய க்யூப்களில் இருந்து தயாரிக்கலாம். இதுபோன்ற இரண்டு க்யூப்கள் அயோத்திக்கு அனுப்பப்பட்டுள்ளன. விமானப்படை மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அயோத்தியில் லதா மங்கேஷ்கர் சௌக் மற்றும் டென்ட் சிட்டி ஆகிய இரண்டு இடங்களில் இரண்டு மருத்துவமனைகளை தயார் செய்வார்கள். ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) தன்மய் ராய் ஆரோக்ய மைத்ரி கியூப் திட்டத்தின் தலைவர் ஆவார். இந்த கையடக்க மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் ஒரு விமானப்படை மருத்துவர் மற்றும் மருத்துவ ஊழியர்கள் உட்பட மொத்தம் 6 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

ஒரு ஆரோக்யா மைத்ரி கியூப் மருத்துவமனை 400 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும். மத்திய சுகாதார அமைச்சகத்தின் சிறப்புத் திட்டத்தின் கீழ் இந்த கையடக்க மருத்துவமனை தயாரிக்கப்பட்டுள்ளது, இது முதன்முறையாக உலகிற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த மருத்துவமனை எந்த விதமான பேரிடரின் போதும் 200 பேருக்கு சிகிச்சை அளிக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. மேலும், ஒரே நேரத்தில் 25 பேருக்கு பரிசோதனைகள் செய்யமுட்யும்.

ஆரோக்கிய மைத்ரி மருத்துவமனையில் (arogya Maitri Hospital) 100 பேரை 48 மணி நேரம் தங்க வைக்கலாம். எந்தவித அவசரநிலை, அறுவை சிகிச்சை, தீ, போர், வெள்ளம், நிலநடுக்கம் என அனைத்து வகையான பேரிடர்களிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த மருத்துவமனை துரிதமாக சிகிச்சையளிக்கும்.

ரூபிக்ஸ் கியூப்' (Rubik’s Cube) விளையாடுபவர்களுக்கு இந்த மருத்துவமனையின் அறிவியல் சுலபமாகப் புரியும். ரூபிக்ஸ் கியூப் போன்ற ஒரு மருத்துவமனை எவ்வளவு சிறியதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ரூபிக்ஸ் கியூப் விளையாட்டைப் போன்று 36 சதுர பெட்டிகளில் அடைக்கப்பட்ட உலகின் மிகச்சிறிய அவசரகால மருத்துவமனை இது. வானத்திலிருந்து தரையிலோ அல்லது தண்ணீரிலோ எங்கு வேண்டுமானாலும் தூக்கி எறியலாம், அதனால் அது சேதமடையாது.

இந்த மருத்துவமனை கட்டுமானம் ஓராண்டுக்கு முன்னரே துவங்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகம் இணைந்து உருவாக்கிய இந்த மருத்துவமனை, ப்ராஜெக்ட் பீஷ்மா (Project Bhisma) தொடங்கப்பட்டது, இதன் கீழ் இந்த மருத்துவமனை HLL Lifecare உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மருத்துவமனையின் விலை சுமார் 2.5 கோடி ரூபாய். இலங்கை மற்றும் மியான்மர் நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசி அன்பளிப்பாக வழங்கப்பட்டது போலவே, இந்த மருத்துவமனையும் இந்திய அரசால் இந்த இரு நாடுகளுக்கும் வழங்கப்படுகிறது.

இந்த போர்டபிள் மருத்துவமனையைப் பற்றி தெரியாத மருத்துவரோ அல்லது புதிய மருத்துவ நிபுணரோ கூட தயார் செய்யும் வகையில் ஆரோக்கிய மைத்ரி வடிவமைக்கப்பட்டுள்ளது. எப்படி இதை கட்டமைப்பது என்பது தொடர்பான முழுத் தகவல் பீஷ்மா செயலியில் உள்ளது, அதனுடன் இரண்டு மொபைல் போன்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஃபோன்கள் ஆஃப்லைன் சிஸ்டத்தில் அதாவது இணையம் இல்லாமல் கூட வேலை செய்ய முடியும்.

பீஷ்மா செயலியில் (Bhishma App) 60 வெவ்வேறு மொழிகளில் முழுமையான தகவல்கள் உள்ளன. இது தவிர RFID குறிச்சொல்லும் உள்ளது. இது இணையம் இல்லாமல் கூட வேலை செய்ய முடியும். எந்த பெட்டியில் என்ன இருக்கிறது என்ற தகவல் பெட்டியின் மேல் எழுதப்பட்டிருக்கும். தகவலைப் படிக்க முடியவில்லை என்றால் ஒவ்வொரு பெட்டியின் மேல் வைக்கப்பட்டுள்ள QR குறியீட்டை RFID மூலம் ஸ்கேன் செய்து தகவலைத் தெரிந்துக் கொள்ளலாம்.

QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், எந்த பெட்டியில் மருந்துகள் உள்ளன, அவற்றின் காலாவதி தேதி என்ன என்பதை அறியலாம். அதேபோல, எந்த பெட்டியில் எலும்பு முறிவு சிகிச்சைக்கான கருவிகள் உள்ளன, எந்த பெட்டியில் எக்ஸ்ரே செய்யும் வசதி உள்ளது என அனைத்து தகவல்களும் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement