For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சிறிய முதலீடு..!! 3 ஆண்டுகளில் ரூ.6.20 லட்சம்..!! வட்டி எவ்வளவு தெரியுமா..?

05:49 AM May 02, 2024 IST | Chella
சிறிய முதலீடு     3 ஆண்டுகளில் ரூ 6 20 லட்சம்     வட்டி எவ்வளவு தெரியுமா
Advertisement

ஈக்விட்டி லிங்க்டு சேவிங் ஸ்கீம் (ஈஎல்எஸ்எஸ்) என்பது ஒரு வகையான ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டு திட்டமாகும். இத்திட்டங்கள் வரி சேமிப்பு நிதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை 3 வருட லாக்-இன் காலத்துடன் வருகின்றன. வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வரி தளர்வு அளிக்கப்படுகின்றன.

Advertisement

சில இ.எல்.எஸ்.எஸ் நிதிகள் கடந்த 3 ஆண்டுகளில் சிறந்த வருமானத்தை அளித்தது மட்டுமின்றி, அவற்றின் அளவுகோல்களை முழுமையாக முறியடித்துள்ளன. அந்த வகையில், 3 வருட காலப்பகுதியில் சிறந்த 3 இ.எல்.எஸ்.எஸ் நிதிகளின் பட்டியலை தற்போது பார்க்கலாம். இந்த ஃபண்ட் 3 வருட காலத்தில் 33.17 சதவீத வருமானத்துடன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளன.

குவாண்ட் இ.எல்.எஸ்.எஸ் (Quant ELSS) வரி சேமிப்பு நிதி

இந்த வரி சேமிப்பு நிதி 21.08 சதவீதம் வரை வருமானம் அளித்துள்ளது. இந்த, இ.எல்.எஸ்.எஸ் (ELSS) நிதியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் (AUM) ரூ. 9,143.70 கோடி ஆகும். இந்த ஃபண்டின் முதலீடுகளில் 98.32% உள்நாட்டு பங்குகளில் உள்ளது. 49% பெரிய அளவிலான பங்குகளில் உள்ளது. அதன் போர்ட்ஃபோலியோவில் RIL, அதானி பவர், ஜியோ ஃபைனான்சியல்ஸ் சர்வீசஸ் லிமிடெட் ஆகியவற்றுடன் 44 பங்குகள் உள்ளன. 36 மாதங்களுக்கு ரூ.10,000 SIP திட்டத்தில் மொத்தம் ரூ.6,20,381 வழங்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ நீண்ட கால ஈக்விட்டி ஃபண்டு

3 வருட காலத்தில் எஸ்பிஐ நிதி 29.92% வருமானத்தை அளித்துள்ளது. இது S&P BSE 500 மொத்த வருவாய் குறியீட்டை அதன் பெஞ்ச்மார்க் விஞ்சியுள்ளது. அதே காலகட்டத்தில் 21.01% வருமானத்தை அளித்துள்ளது. நிதியின் AUM ரூ. 23,202.34 கோடியாக உள்ளது. இந்த ஃபண்ட் தனது முதலீட்டில் 90.19 சதவீதத்தை ஈக்விட்டிகளில் கொண்டுள்ளது. இதில் மொத்தம் 65 பங்குகள் உள்ளன. ஃபண்டில் 3 ஆண்டுகளுக்கு ரூ.10,000 எஸ்ஐபி ரூ.5,86,533 கொடுத்துள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி (HDFC ELSS) வரி சேமிப்பு நிதி

ஃபண்டின் 3 ஆண்டு வருமானம் 27.93% ஆகும். இந்த நிதியின் AUM ரூ.14,434.34 கோடி ஆகும். இந்த நிதியானது அதன் முதலீடுகளில் 92.66 சதவீதத்தை உள்நாட்டு பங்குகளில் கொண்டுள்ளது. அதன் பங்குகளில் 62.93 சதவீதம் லார்ஜ் கேப் ஃபண்டுகளில் உள்ளது. இந்த ஃபண்டின் போர்ட்ஃபோலியோவில் ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி முன்னணி நிறுவனங்களுடன் 40 பங்குகள் உள்ளன.

Read More : பக்கத்து வீட்டு பையனுடன் உல்லாசமாக இருந்த மனைவி..!! அடித்தே கொன்ற அண்ணன், சகோதரி..!!

Advertisement