For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

டிகிரி போதும்.. மத்திய அரசு வங்கியில் வேலை.. ரூ.1 லட்சம் வரை சம்பளம்..!! சூப்பர் ஆஃபர் மிஸ் பண்ணிடாதீங்க..

Small Business Development Bank (SIDBI) under the Union Ministry of Finance has released a notification to fill the vacant posts.
01:58 PM Nov 12, 2024 IST | Mari Thangam
டிகிரி போதும்   மத்திய அரசு வங்கியில் வேலை   ரூ 1 லட்சம் வரை சம்பளம்     சூப்பர் ஆஃபர் மிஸ் பண்ணிடாதீங்க
Advertisement

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சிறு தொழில் மேம்பாட்டு வங்கி (SIDBI) -யில் காலியாக உள்ள 72 அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதுகுறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

Advertisement

பணியிடங்கள் விவரம்:

உதவி மேலாளர் கிரேடு ஏ - 50 காலிப்பணியிடங்கள்

மேனேஜர் கிரேட் பி - 10

மேனேஜர் கிரேட் பி (லீகல்) - 6

மேனேஜர் கிரேட் பி (ஐடி) - 06

என மொத்தம் 72 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி: பணியிடங்களின் தன்மைக்கேற்ப கல்வி தகுதி மாறுபடும். உதவி மேலாளர் பணிக்கு வணிகவியல்/ பொருளாதாரம்/கணிதம் / வணிகநிர்வாகவியல் பாடப்பிரிவில், 60 சதவீத மதிப்பெண்களுடன் கூடிய என்ஜினியரிங் பட்டம் என இதில் ஏதாவது ஒன்று முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சிஏ, சிஎஸ் போன்ற கணக்கியல் தொடர்பான படிப்புகளை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: அஸ்சிஸ்டண்ட் மேனேஜர் பணிக்கு 21 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதர பணியிடங்களுக்கு 25 வயது முதல் 33 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசின் விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் வழங்கப்படும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சம்பளம் எவ்வளவு?:

உதவி மேலாளர் கிரேடு 'ஏ' - ரூ.44,500 - 89,150/-

மேலாளர் கிரேடு 'பி' - ரூ.55,200 - 99,750/-

தேர்வு முறை: இரண்டு கட்ட ஆன்லைன் தேர்வுகளுக்கு பிறகு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் நடைபெறும். இரண்டாம் கட்ட ஆன்லைன் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழியாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக ரூ.1,100- செலுத்த வேண்டும். எஸ்.டி/ எஸ்.சி,மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு ரூ.175 தெர்வு கட்டணமாகும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 02.12.2024

Read more ; நனைந்த படியே வீடு திரும்பிய மாணவர்கள்.. பள்ளி விடுமுறை அறிவிப்பில் தாமதம் ஏன்? – உதயநிதி விளக்கம்

Tags :
Advertisement