டிஎன்பிஎஸ்சி-க்கு புதிய தலைவர்..!! அதிரடியாக நியமித்த ஆளுநர்..!! 6 ஆண்டுகள் பதவிக்காலம்..!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக எஸ்.கே.பிரபாகரை நியமித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டிஎன்பிஎஸ்சி) தலைவராக இருந்த பாலச்சந்திரன், 2022ஆம் ஆண்டு ஜூம் மாதம் ஓய்வு பெற்றார். அதன் பின்னர், உறுப்பினராக உள்ள முனியநாதன், பொறுப்பு தலைவராக செயல்பட்டு வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய தலைவர் நியமிக்கப்படாமல் இருந்து வந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ்-யை நியமித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். வருவாய் துறை கமிஷனராக உள்ள எஸ்.கே.பிரபாகர், விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவராக பொறுப்பேற்க இருக்கிறார்.
பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அவர் பதவியில் நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பெயரை தலைவர் பதவிக்கு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதனை ஆளுநர் ரவி பரிசீலிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : செந்தில் பாலாஜிக்கு இன்று ஜாமீன்..? தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்..!! பரபரப்பில் அரசியல் களம்..!!