முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Solar Power: 50 மெகாவாட் குஜ்ராய் சூரிய மின் நிலையம்...! அசத்தும் எஸ்.ஜே.வி.என் நிறுவனம்...!

06:50 AM Feb 24, 2024 IST | 1newsnationuser2
Advertisement

Solar Power: உத்தரபிரதேசத்தில் 50 மெகாவாட் குஜ்ராய் சூரிய மின் நிலையத்தை எஸ்.ஜே.வி.என் தொடங்கி உள்ளது.

Advertisement

எஸ்.ஜே.வி.என் நிறுவனம் உத்தரபிரதேசத்தின் கான்பூர் தேஹாட்டில் அதன் 50 மெகாவாட் குஜ்ராய் சூரிய மின் நிலையத்தின் வெற்றிகரமான வணிக செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது. இந்தச் சாதனையின் மூலம், எஸ்.ஜே.வி.என் நிறுவனத்தின் மொத்த நிறுவப்பட்ட மின் திறன் 2,277 மெகாவாட் ஆக உள்ளது, தற்போது நாடு முழுவதும் பத்து மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

குஜராத் மாநிலம் அதன் புதுப்பிக்கத்தக்க பிரிவான எஸ்.ஜே.வி.என் பசுமை ஆற்றல் நிறுவனம் (எஸ்.ஜி.இ.எல்) மூலம் ரூ.281 கோடியும், மின் உற்பத்தி மூலம் ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.32 கோடியும் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் முதல் ஆண்டில் 107 மில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்படும். மேலும் 25 ஆண்டுகளில் 2,477 மில்லியன் யூனிட்டுகள் ஒட்டுமொத்த மின் உற்பத்தி செய்யப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் புதைபடிவ எரிபொருள் அல்லாத அடிப்படையிலான எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கவும், 2070-ம் ஆண்டளவில் நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய உதவவும் எஸ்.ஜே.வி.என் உறுதிபூண்டுள்ளது. எஸ்.ஜே.வி.என் பசுமை ஆற்றல் நிறுவனம் சமீப காலங்களில் பல புதுப்பிக்கத்தக்க திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது. இதனால் 2030 ஆம் ஆண்டில் 25 ஜிகாவாட் மற்றும் 2040 ஆம் ஆண்டில் 50 ஜிகாவாட் நிறுவப்பட்ட திறனை அடைய வேண்டும் என்ற அதன் பகிரப்பட்ட தொலைநோக்கை அடைவதற்கான பாதையை அமைத்துள்ளது.

English Summary: SJVN commissions 50 MW Gujrai Solar Power Station in Uttar Pradesh

Advertisement
Next Article