For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விராட் கோலியின் இரண்டு கால்களிலும் ஆறு விரல்கள்..? வெளியான போட்டோ.. ஷாக் ஆன ரசிகர்கள்..!!

09:46 AM Dec 30, 2024 IST | Mari Thangam
விராட் கோலியின் இரண்டு கால்களிலும் ஆறு விரல்கள்    வெளியான போட்டோ   ஷாக் ஆன ரசிகர்கள்
Advertisement

மெல்போர்னில் நடந்து வரும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி கடைசி நாளுக்கு நகர்ந்துள்ளது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி 474 ரன்கள் குவித்த பின், இந்திய அணி 2வது நாள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. இதன்பின் 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த போது, இந்திய அணி கதை முடிந்தது என்று ரசிகர்கள் புலம்பினர்.

Advertisement

ஆனால் வாஷிங்டன் சுந்தர் - நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் இணைந்து 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணி கம்பேக் கொடுக்க காரணமாக அமைந்தனர். சிறப்பாக ஆடிய நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசியதோடு, 4வது நாளில் இந்திய அணியின் ஸ்கோரை 369 ரன்களுக்கு கொண்டு சென்றார். இறுதியாக 189 பந்துகளில் 114 ரன்களை எடுத்து நிதிஷ் குமார் ரெட்டி ஆட்டமிழந்தார்.

2024 இந்தியா vs ஆஸ்திரேலியா 4வது டெஸ்ட் போட்டியின் 3வது நாளில் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நிதீஷ் குமார் ரெட்டி தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். அந்த தருணத்தில் நிதிஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் விராட் கோலியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அதனை நிதிஷ் இணையத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் வெறும் காலுடன் நின்ற கோலியின் காலில் ஆறு விரல்கள் இருப்பதை கண்ட ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர்.

Read more ; பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல்கள் அமைக்க தடை..!! – அத்துமீறும் தாலிபான்களின் ஆதிக்கம்

Tags :
Advertisement